பக்கம்:பர்மா ரமணி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í Í5 பர்மா ரமணி கபாவம், இந்த அறையை வாங்கவா இவ்வளவு தூரம் ஏறிப் போனுேம் சரி, வருத்தப்பட்டு என்ன செய்வது ? பெரிய காரியங்களிலே ஈடுபட்டால், இப் படித்தான் பல கஷ்டங்கள் ஏற்படும். கவலைப்படாதே! எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் ரமணியைக் கண்டுபிடித்துவிடலாம்” என்று ஆறுதல் கூறினன் குண்டுமணி. - - உடனே ஆனந்தன், குண்டுமணி, இனிமேல் என்னுலே இப்படி அறை வாங்கமுடியாது. இன்றைக் குத் தபாலிலே மாமாவுக்கு ஒரு கடிதம் போடப் போகி றேன்” என்ருன், 'கடிதத்திலே என்ன எழுதப் போகிருய்? அறை வாங்குவதற்குப் பட்டனத்திலேயிருந்து ஸ்பெஷலாக ஒர் ஆள் அனுப்பச் சொல்லி எழுதப் போகிருயா?” உனக்கு எல்லாம் வேடிக்கைதான். அடையா ளத்தை வைத்து ரமணியைக் கண்டுபிடிக்கப் போன தால்தானே இந்தக் கஷ்டமெல்லாம்? மாமாவுக்கு எழுதி ரமணியினுடைய போட்டோ' இருந் தால், உடனே அனுப்பச் சொல்லப்போகிறேன். போட்டோ இருந்தால் சுலபமாக அவனைக் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா ?” - ஆமாம்! இப்படி அலையவும் வேண்டாம், அறை வாங்கவும் வேண்டாம்” என்று சிரி த்துக்கொண்டே கூறினுன் குண்டுமணி. 15. தந்தி வந்தது! மானேஜர் மதுரகாயகம் கன்னத்தில் கைவைத்த படி தமது அறையில் உட்கார்ந்திருந்தார். அவர் முகம் மிகவும் வாட்டமாக இருந்தது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/120&oldid=807848" இலிருந்து மீள்விக்கப்பட்டது