பக்கம்:பர்மா ரமணி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்திவந்தது 117 அப்போது, சார், நீங்கள் சொன்னபடி போர்டு எழுதி முடித்துவிட்டோம். வந்து பார்க்கிறீர்களா ?” என்று கேட்டுக்கொண்டே அந்த அறைக்குள் வந்தார் சுதர்சன். - - -- பூரீமுருகன் பால நாடக சபாவிலே சுதர்சன் தலைமை ஓவியராக இருக்கிருர், மிகவும் அழகாகப் படங்கள் வரைவார். படங்களைப் பார்ட் பவர்கள், பார்த்தவுடன் அந்த இடத்தைவிட்டுப் போய்விடமாட்டார்கள்; சிறிது கேரம் அங்கேயே கின்று படம் முழுவதையும் ஆசை திரப் பார்த்துவிட்டுப் பிறகுதான் போவார்கள். அன்று കസ്ഥി விசேஷமாக ஒரு போர்டு எழுத வேண்டுமென்று மதுரநாயகம் சுதர்சனிடம் கூறி யிருந்தார். அதன்படி, சீனத் துாது கோஷ்டியினரே, வருக வருக! என்று ஆங்கிலத்தில் ஒரு போர்டு எழுதினர் சுதர்சன். போர்டின் வலது பக்கம் சீனு தேசத்தின் படத்தை வரைந்திருந்தார். இடது பக்கம் ஒரு சீனரும், ஓர் இந்தியரும் தோள் மேல் கைபோட்டு நிற்பது போல் வரைந்திருந்தார். அதை எழுதி முடிக்கும்போது மாலை காலு மணி, எழுதி முடித்தவுடன்தான், சுதர்சன் மானேஜரிடம் வந்தார். எழுதி முடித்தாய்விட்டது” என்று கூறினர். ஆணுல், அவர் கூறியது மதுரகாய கத்தின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவர் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். என்ன சார், கவலையாக இருக்கிறீர்களே !’ என்று கேட்டார் சுதர்சன். ' ஒன்றும் இல்லை. ரமணியைப் பற்றித்தான் கவலை... '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/121&oldid=807849" இலிருந்து மீள்விக்கப்பட்டது