பக்கம்:பர்மா ரமணி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #8 பர்மா ரமணி

ஏன் சார், திருச்சியிலிருந்து ஒருவிதமான தக வலும் வரவில்லையா ?”

காலையிலே ஒரு கடிதம் வந்தது. மூன்று காட் களாக என் அக்காள் மகன் ஆனந்தனும் அவன் சிகே கிதனும் திருச்சியிலும், சுற்றுப்புறத்திலும் தேடு தேடென்று தேடிப் பார்த்துவிட்டார்களாம். கிடைக்க வில்லையாம். ரமணியின் போட்டோ இருந்தால் உடனே அனுப்பி வையுங்கள். சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம் என்று எழுதியிருந்தான். ரமணியின் போட்டோ இங்கே இருந்தால்தானே அனுப்புவதற்கு ? ரமணியின் போட்டோ எதுவும் இல்லை எப்படியாவது அடையாளத்தை வைத்துக் கண்டுபிடியுங்கள். ஒரு வாரத்தில் கிடைத்துவிட்டால் கல்லது. இல்லாத போனல், நானே கேரில் வருகிறேன் என்று சற்று முன் புதான் பதில் எழுதிப் போட்டேன்......ம். ஒரு போட்டோ இருந்தால் எவ்வளவு உதவியாயிருக்கும் ?” என்று கூறிப் பெருமூச்சுவிட்டார் மதுரகாயகம். இதைக் கேட்டதும் சுதர்சன் சிறிதுநேரம் யோசனை செய்தார். பிறகு, சார் சார் ! எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது !’ என்ருர். இதைக் கேட்டதும், யோசனையா அது என்ன ? சீக்கிரம் சொல் ” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார் காடக சபா மானேஜர் மதுரகாயகம். உடனே சுதர்சன், எனக்குத்தான் ரமணியை நன்ருகத் தெரியுமே ! ஆகையால்... ' என்று இழுத் தார். w ஆகையால், நீயே திருச்சிக்குப் புறப்பட்டுப் போகிறேன் என் கிருயா ?” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/122&oldid=807850" இலிருந்து மீள்விக்கப்பட்டது