பக்கம்:பர்மா ரமணி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தி வந்தது 119. இல்லை சார் ரமணியின் உருவத்தை அப்படியே அச்சாக எழுதிக் கொண்டு வந் துவிடுகிறேன். இன்று இரவு எந்நேரம் ஆலுைம் சரிதான்; எழுதி முடித்து விட்டுத்தான் படுப்பேன்’ என்ருர் சுதர்சன். இதைக் கேட்டதும் மதுரகாயகம் இருந்த இடத்தை விட்டுக் குதித்துக்கொண்டு எழுந்தார். அடடே, நல்ல யோசனையாயிருக்கிறதே! அப் படியே செய், சுதர்சன். நாளேக்குக் காலையிலே நீ படம் எழுதிக்கொண்டு வந்தவுடனே நான் என்ன தெரியுமா செய்யப் போகிறேன் ! நேராக நவநீதம் ஸ்டுடியோ வுக்குப் போய் அந்தப் படத்தை போட்டோ எடுக்கச் சொல்லப் போகிறேன். ' போட்டோவா! அது எதுக்கு சார்? நான் எழுதிக் கொண்டு வரப்போகும் படத்தையே நீங்கள் திருச்சிக்கு அனுப்பி விடலாமே!’ சேச்சே, அப்படிச் செய்யக் கூடாது சுதர்சன். தபாலில் அனுப்பும்போதுவழியிலே தொலைந்துபோனுல் இன்னெரு தடவையல்லவாஎழுதவேண்டும்? போட்டோ எடுத்து அனுப்புவதுதான் நல்லது. நான் இன்னுெரு யோசனையும் வைத்திருக்கிறேன். அந்தப் போட்டோ விலே பத்துப் பிரதிகள் எடுக்கச் சொல்லப் போகிறேன். அவசரம்' என்று சொன்னுல் கா8ளச் சாயங்காலமே தந்து விடுவார்கள். ஒரு பிரதியைத் திருச்சிக்கு அனுப்பிவிட்டு, மற்றபிரதிகளே முக்கியமான பத்திரிகை களுக்கு அனுப்பி விளம்பரம் செய்யப் போகிறேன். ரமணி திருச்சியில் இல்லாத போனல் கூட வெகு சுல பத்தில் அகப்பட்டுவிடுவான் எப்படி என் யோசனை ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/123&oldid=807851" இலிருந்து மீள்விக்கப்பட்டது