பக்கம்:பர்மா ரமணி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

體3 - - பர்மா ரமணி கசரியான யோசனை சார். கான் இன்றைக்கு இரவே ரமணியின் படத்தை எழுதி முடித்துவிடுகிறேன். அதி காலையில் உங்கள் வீட்டுக்குப் படத்துடன் வந்து சேரு கிறேன். என்ன சார், சரிதான ?” - அப்படியே செய் சுதர்சன். நீ செய்யப் போகும் உதவியால், ரமணி சீக்கிரம் கிடைத்து விடுவான் என்றே நினைக்கிறேன்' என்று ஆனந்தம் பொங்கக் கூறினர் மதுரநாயகம் 畿 容 - 岑 அன்று இரவு சாப்பிடும் போதெல்லாம் மதுரகாய கமும், கமலாதேவியும் ரமணியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். சாப்பாட்டை முடித்துக்கொண்டு அறைக்குள்ளே சென்று மதுரகாயகம் ஒரு காகிதத்தை எடுத்தார். அதில் யோசித்து யோசித்து ஏதோ எழுதி ஞர். எழுதிவிட்டுப் படித்துப் பார்த்தார் : . பையனைக் காளுேம் ! மேலேயுள்ள பையனின் பெயர் ரமணி. வயது 13. மாநிறம். சுமார் நாலரை அடி உயரம். பத்து நாட்களாகக் காணவில்லை. அவன் மீது தவறு எதுவும் இல்லை. திரும்பி எப்போது வருவான் என்று ஆவலாக அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருேம். அவனைக் கண்டு பிடித்துக் கீழ்க்கண்ட விலாசத்துக்குத் தகவல் கொடுப்பவர்களுக்குத் தக்க சன் மானம் கொடுக்கப்படும்-மதுரநாயகம், மானேஜர், பூரீ முருகன் பால நாடக சபா, சென்னை-1. - இதை இரண்டு தடவை படித்துப் பார்த்தார். பிறகு, "சரி இதே போல் ரமணியின் படத்துடன் விளம்பரப்படுத்தி விடலாம். சீக்கிரம் ரமணி கிடைத்து விடுவான். சந்தேகமே இல்லே ' என்று மனத்திற் குள்ளே சொல்லிக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/124&oldid=807852" இலிருந்து மீள்விக்கப்பட்டது