பக்கம்:பர்மா ரமணி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தி வந்தது! 12 பிறகு, படுக்கையில் போய்ப் படுத்தார். கண்களை மூடிக்கொண்டார். ஆனால், துரக்கம் வரவில்லை : சுதர்சன் இப்போது ரமணியின் படத்தை எழுதிக் கொண்டிருப்பான். அங்கு நாமும் போனல் அவ. னுக்கு உதவியாயிருக்கும் என்று நினைத்தார் மதுர காயகம், உடனே படுக்கையை விட்டு எழுந்தார், சட்டையை மாட்டிக்கொண்டார். விறு விறு என்று கடநதாா. இரண்டு மைல் துரத்திலிருந்த ஒரு மாடி வீட்டை கோக்கிச் சென்ருர், அந்த வீட்டை அடைந்த தும், மாடிப் படிகளில் ஏறி மெதுவாக மேலே சென் ருர் அங்கிருந்த ஏழாம் எண்ணுள்ள அறையை கெருங்கினர். அறையில் விளக்கு எரிந்து கொண் டிருக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். வெளிச்சம் இல்லாமல் படம் எழுத முடியாதல்லவா? ஆளுல், அந்த அறையில் விளக்கு எரியவில்லை. அறைக் கதவு திறந்திருக்கிறதா என்று பார்த்தார். இல்லை; அது சாத்தப்பட்டிருந்தது. என்ன இது சுதர்சன் துரங்கி விட்டானே !! என்று கினைத்துக் கதவை மெதுவாகத் தட்டினர்; பதில் இல்லை கொஞ்சம் பலமாகவே தட்டினர்; அதற்கும் பதில் இல்லை ! - கதவைத் தட்டும்போது அவர் கையில் ஏதோ தட்டுப்பட்டது. அதைத் தொட்டுப் பார்த்தார். உடனே திடுக்கிட்டார். ஆ ! பூட்டு என்ன இது கதவு பூட்டப்பட்டிருக்கிறதே சுதர்சன் எங்கே போய் விட்டான்? அவன் பொய் சொல்லமாட்டானே ! அவன் அறையில் இன்னுெரு சிநேகிதனும் இருப்பதாகச் சொன்னனே! அவனையும் காணுேமே! இருவரும் சினிமா பார்க்கப் போயிருப்பார்களோ ! என்று எண்ணினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/125&oldid=807853" இலிருந்து மீள்விக்கப்பட்டது