பக்கம்:பர்மா ரமணி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 பர்மா ரமணி யாரையாவது கேட்கலாமென்று சுற்று முற்றும் பார்த்தார். பக்கத்து அறையில் உள்ளவர்கள் எல்லா ரும் தூங்கிவிட்டார்கள். கதவைத் தட்டி அவர்களை எழுப்பிக் கேட்க கினைத்தார். ஆலுைம், அவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று பயந்து பேசாமல் கீழே இறங்கி வந்துவிட்டார். அப்போது வாசலில் காவல்காரன் கின்று கொண்டிருப்பதை அவர் கண் டார். அவன் பக்கத்திலே சென்று, எனப்பா, மாடி யிலே ஏழாம் கம்பர் அறை பூட்டி யிருக்கிறதே! அதில் சுதர்சன் என்று ஒருவர் இருப்பாரே, அவர் எங்கே? எப்போது வருவார்?' என்று கேட்டார்.

ஊரிலிருந்து எப்போது வருவார் என்றுதானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி அவர் எதுவுமே சொல்ல வில்லையே! பாவம், அவருக்கு இருந்த துக்கத்திலே எப்படி சார் அதைச் சொல்லுவார்?' என்ருன் காவல் காரன்.

என்ன துக்கமா ! ஊருக்குப் போயிருக்கிருரா !” என்று திகைப்புடன் கேட்டார் மதுரநாயகம், - ஆமாம் சார். ராத்திரி எட்டு மணி இருக்கும். ஊரிலேயிருந்து ஒரு அவசரத் தந்தி வந்தது. உடனே ரயிலுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். கூடவே அவர் அறையிலிருக்கும் பரமசிவமும் போயிருக்கிருர் இன்னும் திரும்பி வரவில்லை. வெகு நேரமாகி விட்டது.” தந்தி வந்ததா? என்ன விஷயமாம்? உனக்குத் தெரியுமா ?” என்று பரபரப்போடு கேட்டார் மதுர 爵*冠Jö盘。 - சுதர்சன் இருக்கிருரே, அவருக்கு ஒரே ஒரு ஆண் குழந்தையாம். அது இறந்து போய்விட்டதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/126&oldid=807854" இலிருந்து மீள்விக்கப்பட்டது