பக்கம்:பர்மா ரமணி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் கெட்டது ! 重4翼 வில்லை. பட்டினி கிடந்தேன். இரவிலே ஒரு தெருத் திண்ணையிலே படுத்திருந்தேன். தூக்கமே வரவில்லை. அப்போது ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. நான் படுத் திருந்த திண்ணைக்குப் பின்புறம் சாய்மானமுள்ள ஒரு திண்ணை இருந்தது. அதற்கு எதிர்ப்புறத்திலேயும் அதே மாதிரி ஒரு திண்ணையிருந்தது. ஆளுக்கு ஒரு திண்ணையில் உட்கார்ந்து, இவர்கள் ரமணி என்பவ இனப் பற்றிப் பேசியது என் காதில் விழுந்தது.' இதை அவன் சொல்லும்போதே, அட டுபாவி! காங்கள் பேசியதை யெல்லாம் கேட்டுக் கொண்டா இருந்தாய் ?’ என்ருன் ஆனந்தன். ஆமாம், இவர்கள் பேச்சிலிருந்து பின் தெரு வுக்குப் போகப் போகிருர்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். இவர்கள் தண்ணிர் குடிக்கப் போன சமயம் பார்த்து, கான் பின் தெருவுக்கு ஓடி, ஒரு வீட்டுக்கு முன்னுல் படுத்துக் கொண்டேன். நான் நினைத்தபடியே இவர்கள் அந்தத் தெருவுக்கு வந்தார் கள். என்னைப் பார்த்ததும் எழுப்பினுர்கள். என்னே விசாரித்தார்கள். கான்தான் ரமணி என்று சொன்னுல் வயிருரச் சாப்பாடு கிடைக்குமே என்று கினைத்துத் தான் இப்படிச் செய்துவிட்டேன். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் என்னை விட்டுவிடுங்கள்' என்று கூறி வேதநாயகம் காலிலே விழுந்து கெஞ்சின்ை அந்த முனியாண்டி! இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்த னுக்கும், குண்டுமணிக்கும், என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. முனியாண்டியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனையே முறைத்துப் பார்த் தார்கள். . 1508–10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/145&oldid=807875" இலிருந்து மீள்விக்கப்பட்டது