பக்கம்:பர்மா ரமணி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#40 பர்மா ரமணி பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்ன மாதிரி அந்த அம்மாள் மிகவும் கல்ல அம்மாள்.' இப்படி அவன் கூறியதும் வேதநாயகத்தின் சந்தேகம் உறுதிப்பட்டது. மதுரகாயகத்தின் மனைவி கமலாதேவியைக் கோதைநாயகி என்று கான் மாற்றிச் சொன்னேன். அதை இவன் மறுத்துச் சொல்லவே இல்லை. அத்துடன், மதுரகாயகம் எழுதிய கடிதத்தில் அவன் வீட்டிலேயே ரமணி சாப்பிட்டு வந்ததாக அல்லவா எழுதியிருக்கிருன் ? இவன் சொல்லுவது எல்லாமே பொய். இவன் ரமணியே அல்ல. ஆனந்தனை கன்ருக ஏமாற்றிவிட்டான்' என்று தீர்மானித்துக் கொண்டு, அவனைப் பார்த்துக் கண்டிப்பான குரலில், டேய், உள்ளதைச் சொல். உன் பெயர் என்ன ?” என்று மிரட்டினர். அவன் பேந்தப் பேந்த விழித்தான். டேய். உள்ளதைச் சொன்னுல் தப்பினுய்! இல் லாத போனுல், போலீஸில் ஒப்படைத்து விடுவேன். உம், சொல்லு' என்று கத்தினர். உடனே அவன் கடுகடுங்கின்ை. சார், போலீஸ் வேண்டாம், சார் உள்ளதைச் சொல்லிவிடுகிறேன்; சார். என் பெயர் ரமணி இல்லை. முனியாண்டி’ - இதை அவன் சொன்னதும், என்ன! முனி பாண்டியா!' என்று ஆனந்தனும் குண்டுமனியும் ஆச்சரியத்தோடு கேட்டார்கள். அவர்களுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. அவன் மேலும் சொன்னன்: கான் ஒர் ஏழை. பிச்சை எடுத்துக் காலம் தள்ளி வருகிறேன். நேற்று முழுதும் எனக்கு ஒரு வாய் சோறுகூடக் கிடைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/144&oldid=807874" இலிருந்து மீள்விக்கப்பட்டது