பக்கம்:பர்மா ரமணி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் கெட்டது! 133 கோளு?...நாடக சபாவிலே சேர்க்து எத்தனை வருவடி மாகிறது என்றுதானே கேட்கிறீர்கள்? நாலு வருஷத் துக்கு மேலே யிருக்கும்.” இதைக் கேட்டதும் வேதநாயகம் திடுக்கிட்டார். என்ன இது காடக சபா ஆரம்பித்து ஒன்றரை வருஷங்கூட ஆகவில்லையே! ஒரேயடியாக காலு வருஷம் என்று சொல்லுகிருனே! என்று சந்தேகப் l-JL-L-srss. . உடனே மேலும் கேள்விகள் கேட்டார். ஒகோ! காலு வருஷத்துக்கு மேலே இருக்குமா ? அதுதான் மதுரநாயகம் உன்மேல் உயிரையே வைத்திருக்கிருர்: சரி, அந்த நாடக சபா முதலாளி...அவர் பெயர் ஏதோ சொன்னரே! மறந்தே போய்விட்டது...அவர் பெயர் என்ன தம்பி?” என்று கேட்டார்.

  • முதலாளி பெயரா?......அவா பெயர்......அவர் பெயர்.ராமசாமி.ஆமாம், ராமசாமிதான்.”

முதலாளியின் பெயர் மோகனரங்கம் என்பது வேதநாயகத்துக்கு கன்ருகத் தெரியும். அப்படியிருக் கும்போது, ராமசாமி என்று அவன் சொன்னதும், அவ ரது சந்தேகம் வலுத்துவிட்டது. ஆலுைம், வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஆமாம், ஆமாம். ராமசாமியே தான் அவர் தங்கமான மனிதர். மதுரகாயகம் சம் சாரம் கோதைநாயகிகூட மிகவும் கல்லவள். ரமணி, ரீ கோதைநாயகியை எப்போதாவது பார்த்திருக் கிருயா?” என்று கேட்டார். என்ன அப்படிக் கேட்கிறீர்களே? கோதைநாயகி அம்மாளே எனக்கு கன்ருகத் தெரியும். சில சமயம் சாப்பாடு எடுக்க வீட்டுக்குப் போவேன். அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/143&oldid=807873" இலிருந்து மீள்விக்கப்பட்டது