பக்கம்:பர்மா ரமணி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் யார் ? £45 பிடியாய்ப் பிடித்துவிட்டேன்' என்று பெருமையோடு கூறினர் போலீஸ்காரர். உடனே அந்தப் பையன் அந்த மனிதரைப் பார்த்து, 'ஐயா, ஐயா, நல்ல சமயத்திலே நீங்கள் வந் தீர்கள். உங்களுக்குத்தான் உண்மை புரியும். அந்த மண்டபத்திலே நீங்கள் இந்தப் பொட்டணத்தை மறந்து வைத்துவிட்டு மோட்டாரிலே ஏறி விட்டீர்கள் அப் போது தற்செயலாக நான் இதைப் பார்த்தேன். உடனே 'சார், சார் என்று கூவிக்கொண்டே உங்களிடம் பொட்டணத்தைப் பற்றிச் சொல்ல வந்தேன். ஆணுல்: நீங்கள் என் பேச்சைக் கேட்க விரும்பாமல் போய்விட் டீர்கள். ஆலுைம் கான் விடாமல், பொட்டணத்தை எடுத்துக்கொண்டு காரைப் பின்தொடர்ந்து ஓடி வக் தேன். எப்படியாவது உங்களிடம் சேர்த்துவிட வேண்டுமென்றுதான் வேகமாக வந்தேன். வழியிலே முடிச்சு அவிழ்ந்து புடவைகளெல்லாம் விழுந்துவிட் டன. கல்லது செய்யப்போக இப்படிப் பொல்லாப்பு வந்துவிட்டதே ' என்று கண் கலங்கக் கூறினன். இதைக் கேட்டதும், அந்த மனிதர் சிறிது கேரத் துக்கு முன்பு கடந்ததை கினைத்துப் பார்த்தார். அவர், அவருடைய மனைவி, ஐந்து வயதுப் பெண் மூவரும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோயிலுக்கு எதிரே புள்ள மண்டபத்தில் கின்றுகொண்டிருந்தார்கள். அவர் கள் ஒரு மோட்டார் காரை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்த கார் வந்துவிட்டது. உடனே அவர்கள் மூவரும் காரில் ஏறிக் கொண்டார்கள். கார் புறட்படப் போகும்போதுதான் அந்தப் பையன் சார், சார்’ என்று கூவிக்கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/149&oldid=807879" இலிருந்து மீள்விக்கப்பட்டது