பக்கம்:பர்மா ரமணி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் யார் ? £47 உன்னைப் போய்த் திருடனென்று சொன்னுரே அந்தப் போலீஸ்காரர்! நல்ல காலம், உன் கையில் கிடைக்கா திருந்தால் இதன் கதி என்ன ஆகியிருக்குமோ காலு புடவையும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாயாகிறது! நான் உன்னைப் பிச்சைக்காரன் என்று நினைத்து விரட்டி னேன். அப்படியிருந்தும் நீ எங்களுக்கு கல்லது செய்ய முன்வந்தாய். உண்மையிலேயே நீ கல்ல பையனப்பா. சரி, வா. காரிலே நீயும் ஏறிக்கொள். எங்கள் உறவினர் வீடு காலாவது தெருவிலே இருக்கிறது. அங்கே போய்ப் பேசிக் கொள்ளலாம்” என்று கூறி அவனே அழைத்துக் கொண்டு காருக்கு வந்தார். காரில் உட்கார்ந்து கொண் டிருந்த தன் மனைவியிடம் கடந்ததையெல்லாம் சுருக்க மாக எடுத்துச் சொன்னுர். அதைக் கேட்டதும், பாவம், கல்ல பையன்' என்ருள் அவரது மனே வி.

  • அடே, இந்த அண்ணு கல்ல அண்ணுதான் !' என்று கூறினுள் அவரது அருமைப் பெண்.

அந்த மனிதர் யாரென்பது தெரிய வேண்டாமா? அவரது பெயர் சிற்சபேசன். அவரது மனைவி பெயர் காமாட்சி அம்.ாள். பெண் பெயர் மாலதி, அவர்களது சொந்த ஊர் மதுரை. சிற்சபேசனுக்குப் பர்மாவிலே ஏராளமான சொத்து இருக்கிறது இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு அங்கிருந்து கிறையப் பணம் வந்து கொண்டிருந்தது. ஆனல், யுத்தம் நடந்தபோது பணம் வர வழியில்லை. யுத்தம் முடிந்த பிறகும் பர்மா காடு சுதந்திர நாடாகி விட்டதால், இந்தியர்கள் அங்கிருந்து முன்போல் பணம் கொண்டு வராதபடி பர்மா சர்க்கார் செய்துவிட்டார்கள். மாதா மாதம் நாற்பது ரூபாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/151&oldid=807882" இலிருந்து மீள்விக்கப்பட்டது