பக்கம்:பர்மா ரமணி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#48 பர்மா ரமணி அனுப்பலாம். அதற்கு மேல் அங்கிருந்து அனுப்ப முடி பாது என்று உத்தரவிட்டனர். பர்மாவில் ஏராளமான வீடுகள், கிலங்கள், நிறையப் பணம் எல்லாம் இருந்தும் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லையே என்று சிற்சபேசன் எண்ணினர். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். குடும்பத்துடன் பர்மாவுக்குப் புறப்பட்டுப் போய், அங்கேயே கொஞ்ச காலம் இருப்பது என்று முடிவு செய் தார். அயல் காட்டுக்குப் போவ தென்ருல் பாஸ் போர்ட் வேண்டுமல்லவா? ஆ. த லா ல் பாஸ் போர்ட்'டுக்கு ஏற்பாடு செய்யச் சென்னைக்கு எல்லோரு மாக வந்தார்கள். சென்னையிலிருந்து திரும்பும்போது காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். அங்கே அவர்களது நெருங்கிய உறவினர்கள் இருக்கிருர்கள். அவர்களையும் பார்த்துவிட்டு, பெயர் பெற்ற காஞ்சிபுரம் பட்டுச் சேலை களேயும் வாங்கிக் கொண்டு மதுரைக்குப் போகத் திர்மானித்தார்கள். அன்று காலேயில் உறவினருடைய காரிலே புறப் பட்டு வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சற்று முன்ன லுள்ள ஒரு பட்டு வியாபாரி வீட்டுக்கு வந்தார்கள். அங்கே இறங்கிக்கொண்டு ஏதோ ஒரு வேலையாகக் காரை அனுப்பி வைத்தார்கள். புடவைகளை வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு,எதிரேயுள்ள மண்டபத்தில் காத்திருப்பதாகவும், பத்து மணி சுமாருக்குக் காரைக் கொண்டுவரும்படியும் டிரைவரிடம் சொல்லி அனுப்பினுர் சிற்சபேசன், அப்படியே பத்து மணிக்கு கார் திரும்பி வந்தது. சுவாமி தரிசனம் செய்துவிட்டுக் காத்துக்கொண்டிருந்த சிற்சபேசன் குடும்பத்தார் காரிலே ஏறிச் சென்ருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/152&oldid=807883" இலிருந்து மீள்விக்கப்பட்டது