பக்கம்:பர்மா ரமணி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் யார்? #49 அப்போது அவசரத்தில் மறந்து வைத்துவிட்டுப்போன புடவைப் பொட்டணம்தான் அந்தப் பையன் மூலமாக இப்போது கிடைத்தது! பட்டுப் புடவைகளைக் காப்பாற்றிக் கொடுத்த பையனை மோட்டாரில் ஏற்றிக்கொண்டு உறவினர் வீட்டுக்குப் போனுர் சிற்சபேசன். அங்கே போனதும்: அவனைப் பற்றிய முழு விவரங்களையும் அவனிட மிருந்து அவர் தெரிந்துகொண்டார். அக்தப் பையன் யார் ? வேறு யாருமல்ல ; ரமணி தான் ஆம் ; ரமணியேதான் ரமணி எப்படிக் காஞ்சி புரத்துக்கு வந்தான் ? நாடக கபா முதலாளி அவன் பட்டுத் துணியைத் திருடிவிட்டதாகக் கூறி வெளியே பிடித்துத் தள்ளி ேைர, அன்றே சென்னையை விட்டு அவன் புறப்பட்டு விட்டான். கால் போனபடி கடந்தான்; நடந்தான்; கடந்துகொண்டே யிருந்தான். நன்ருக இருட்டி விட்டது. அதற்காக அவன் கிற்கவில்லை நல்ல பசி எடுத்தது; எதுவும் சாப்பிடவில்லை ஏதாவது வாங்கிச் சாப்பிடுவதற்குப் பண மும் இல்லை. இரவு முழுவதும் சாப்பிடாமல், நிற்காமல் கடந்தான். விடியும் சமயம், காம் எங்கே இருக்கிருேம்?' என்று கிமிர்ந்து பார்த்தான். எதிரே பெரிய பெரிய கோபுரங்கள் தெரிந்தன. இது எந்த ஊராக இருக்கும் ? என்று யோசித்தான். சிறிது கேரத்தில் அது காஞ்சிபுரம் என்பது தெரிந்துவிட்டது. சரிதான். காம் ஒரு புண்ணிய ஸ்தலத்துக்குத் தான் வந்திருக்கிருேம் என்று கினைத்து ஆறுதல் அடைந்தான். அப்போது அவனுக்கு கல்ல பசி. கையிலே காசிருந்தால் ஏதேனும்வாங்கிச் சாப்பிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/153&oldid=807884" இலிருந்து மீள்விக்கப்பட்டது