பக்கம்:பர்மா ரமணி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பர்மா ரமணி என்ன செய்வது?’ என்று யோசித்தான். அப்போது ஒரு ஹோட்டல் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. உடனே அந்த ஹோட்டலை கோக்கிச் சென்ருன். தயக்கத்துடன் ஹோட்டல் முதலாளியின் அருகே போய், ஐயா, கேற்று மத்தியானம் சாப்பிட்டது. எனக்கு ஒரே டசியாயிருக்கிறது. ஏதாவது வேலை கொடுங்கள். செய்து முடித்த பிறகு, பசி தீரக் கொஞ் சம் பலகாரம் கொடுங்கள்’’ என்று கெஞ்சிக் கேட் டான். ரமணியின் பேச்சைக் கேட்டதும், ஹோட்டல் முதலாளிக்கு ஆச்சரியமாயிருந்தது. எத்தனையோ பேர் கன்ருகச் சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காமலே கழுவப் பார்ப்பார்கள். வேறு சில கையிலே காசில் லாமல் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு அவரிடம் வந்து, ஐயா, கையிலே தம்படி இல்லே பசி அபாரமா யிருந்தது. சாப்பிட்டு விட்டேன். ஏவி...! என்று ஏப்பம் விடுவார்கள். அவர்களேட்போல் செய்யாமல், வேலை கொடுங்கள், செய்து முடிக்கிறேன். பிறகு ஆகாரம் தாருங்கள்' என்று ரமணி கேட்டது அவருக்கு ஆச்சரிய மாகவே இருந்தது. உடனே அவர் ரமணியைப் பாய்த்து, 'தம்பி, உன்னைப் பார்த்தால் மிகவும் களைத்திருப்பதாகத் தெரிகிறது. முதலில் சாப்பிடு. வேலையைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, ஒரு சிப்பந்தியிடம் ரமணிக்குப் பசி திரப் பலகாரம் கொடுக்கச் சொன்னுர், காலு இட்டலிகள் சாப்பிட்ட துமே போதும் என்று கூறி, ஒரு கப் காப்பியைக் குடித்துவிட்டு ரமணி எழுந்திருந்தான். கேராக ஹோட்டல் முதலாளியிடம் போய், 'ஐயா, சாப்பிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/154&oldid=807885" இலிருந்து மீள்விக்கப்பட்டது