பக்கம்:பர்மா ரமணி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. மதுரநாயகம் எங்கே ? மதுரைக்கு வந்த பிறகு, ரமணிக்கு நல்ல கல்ல உடைகளேயெல்லாம் வாங்கிக் கொடுத்தார் சிற்ச பேசன். அத்துடன் ரமணிக்கு வேண்டிய கதைப் புத்த கங்களை யெல்லாம் தாராளமாக வாங்கிக் கொள்ளச் சொன்னுர். ரமணி கதைப் புத்தகங்களைக் கருத்தோடு படித்து மாலதிக்கு எடுத்துச் சொல்லுவான். சில சமயம் அவன் கதை சொல்வதை மறைந்திருந்து சிற்ச பேசனும் காமாட்சியம்மாளும்கூடக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போதெல்லாம் காமாட்சி அம்மாள், கேட்டீர்களா ரமணி கதை சொல்வதை ! மாலதிக்குப் பாட்டியிருந்தால் கதை சொல்லுவாள். அவள்தான் இல்லையே! ஆனுலும், அந்தக் குறை தெரியாதபடி ரமணி எவ்வளவு அன்பாய், அழகாய்க் கதை சொல்லுகிருன் 1’ என்பாள்.

ஆமாம் மாலதிக்கு அண்ணனைப் போல ரமணி. இருக்கிருன் என்பாடே, இப்போது பார்த்தாயா? பாட்டி யாகவும் இருக்கிருன் ' என்று சொல்லிச் சிரிப்பார் சிற்சபேசன்.

இதற்கிடையில் மணியை பர்மாவுக்கு அழைத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் சிற்சபே சன் செய்தார். இன்னும் இரண்டு மூன்று மாதங் களில் பர்மாவுக்குப் புறப்படப் போவதாக ரமணி தெரிந்து கொண்டான். உடனே மதுரகாயகத்துக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான். சிற்சபேசனிடம் ஒரு கார்டு வாங்கி அதில் சுருக்கமாக எழுதினன். பர்மா போவதைப் பற்றி எழுதினுல், அவர் தடுத்து விடுவாரோ என்ற பயம்! அதனுல்கான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/158&oldid=807889" இலிருந்து மீள்விக்கப்பட்டது