பக்கம்:பர்மா ரமணி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் யார் ? 153 ஊர்போலப் பர்மாவிலே இருக்கமுடியுமா? உதவி ஒத்தா சைக்கு யாராவது வேண்டும். ரமணி சிறுவனுயிருப்ப தால் பர்மா பாஷையைச் சுலபமாகக் கற்றுக் கொள் வான். வெளியிலே தெருவிலே போய்வர உதவியா யிருப்பான். மாலதிக்கும் இவன் இருந்தால் சந்தோஷ மாய்ப் பொழுது போகும். ஆகையாலே ரமணிக்கும் ஒரு பாஸ் போர்ட்'டுக்கு ஏற்பாடு செய்து விடலாம்” என்ருர், காமாட்சி அம்மாளுக்கும் அது நல்ல யோசனை யாகத் தோன்றியது. ஆமாம், அதுதான் சரி. அப் படியே செய்யுங்கள், ரமணியுடைய தங்கமான குண மும், மரியாதையான நடத்தையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன” என்ருள். ரமணியிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும், அவனுக்கு ஒரே ஆனந்த மாயிருந்தது. சரி என்று தலையை ஆட்டினன் காலாம் காள் அவர்கள் ரமணியை அழைத்துக் கொண்டு திருச்சிக்குப் புறப்பட்டார்கள். அங்கே சிற் சபேசனின் சித்தப்பா இருக்கிருர், அவரைப் பார்த்து விட்டு மறுகாள் காலேயில் மதுரைக்குத் திரும்பினர்கள். திருச்சியில் ஒரு நாள் தங்கியிருந்தபோதுதான் ரமணி மதுரகாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதினன். ஆல்ை, அதில் அவன் விலாசம் எழுதவில்லை. அந்தக் கடிதத்தி லிருந்த தபால் முத்திரையைப் பார்த்துவிட்டுத்தான் ரமணி திருச்சியில் இருப்பதாக மதுரகாயகம் தீர்மா னித்துவிட்டார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/157&oldid=807888" இலிருந்து மீள்விக்கப்பட்டது