பக்கம்:பர்மா ரமணி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பர்மா ரமணி யாக மணி அடித்தால்தான் அவன் ஆடி அசைந்து வருவான். வந்து, ஏன் சார் என்னையா கூப்பிட் டீர்கள் ? என்று சாவதானமாகக் கேட்டான். மதுரநாயகத்துக்கு சிங்காரத்தைப் பிடிப்பதே

  • உனக்கு முன்னுல் இருந்தானே ரமணி, அவன் எவ்வளவு சுறுசுறுப்பாயிருப்பான் ! எப்படி கடந்து கொள்வான் அவன் இருந்த இடத்திலே நீயும் இருக் கிருயே அவன் கால் தூசுக்குக்கூட நீ சமானமா வாயா ?’ என்று அவர் அடிக்கடி கூறுவார்.

சிங்காரம் ரமணியைப் பார்த்ததே இல்லை. அப் படியிருந்தும், மதுரகாயகம் கூறுவதைக் கேட்டுக் கேட்டு ரமணிமேல் அவனுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அத்துடன், .ரமணி திரும்பவும் வந்துவிட்டால் நம்மை கிச்சகம் வீட்டுக்கு அனுப்பி விடுவார் இந்த மதுரகாயகம். ஆகையால், கடவுளே ! ரமணி கிடைக்கவே கூடாது ' என்று தினக்தோறும் வேண்டிக் கொள்வான். ஒருநாள் சிங்காரம் வழக்கம்போல் தபால் ஆபீ சுக்குப் போனன். கடிதங்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தான். வரும்போது, தற்செயலாக அவன் மதுரகாயகத்துக்கு வந்திருந்த ஒரு கார்டைப் பார்த் தான். அதில் ரமணி என்ற கையெழுத்தைக் கண்ட தும் அவன் திடுக்கிட்டான். உடனே, கார்டில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்துப் பார்த்தான். பிறகு, அடடே இந்த ரமணிப் பயல் மதுரையில் அல்லவா இருக்கிருன்! இந்தக் கார்டை மதுரகாயகம் பார்த்தால் ஆபத்துத்தான்! உடனே அவனுக்குத் தந்தி கொடுத்து இங்கே வரவழைத்துவிடுவார் ! அவன் வந்துவிட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/160&oldid=807894" இலிருந்து மீள்விக்கப்பட்டது