பக்கம்:பர்மா ரமணி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரநாயகம் எங்கே? 157 நமக்கு கிச்சயம் சீட்டுக் கொடுத்து விடுவார். ஆதலால், இந்தக் கார்டை மதுரகாயகத்திடம் காட்டவேகூடாது” என்று தீர்மானித்தான். மறுமிெஷமே அதை வழியிலே கிழித்தெறிந்து விட்டான் ! அதற்குப் பிறகு, மதுரையிலிருந்து எந்தக் கடிதம் வந்தாலும், சிங்காரம் கிழித்துப் போட்டுவிடுவான் இந்த விஷயம் மதுரகாயகத்துக்குத் தெரியாதல்லவா? அதனுல் அவர், ரமணி இப்போது எங்கே இருக் கிருனே! எப்படி இருக்கிருனே! என்று கவலைப்பட்டுக் கொண்டே யிருந்தார். 米 ※ ※ ※ மதுரகாயகம் பதில் எழுதவில்லையே என்ற குறை யைத் தவிர, ரமணிக்கு வேறு குறையே இல்லை. சிற் சபேசனும், காமாட்சி அம்மாளும் சொந்தப் பிள்ளை யைப் போலவே கினைத்து, ரமணியிடம் அன்பாக இருந்தார்கள். மாலதியும் சொந்த அண்ணனைப் போலவே அவனைக் கருதி வந்தாள். சிற்சபேசனும் காமாட்சி அம்மாளும், தினமும் மீனுட்சி அம்மன் கோவிலுக்குப் போவார்கள். போகும் போது ரமணியையும் மாலதியையும் கூடவே அழைத் துச் செல்வார்கள். ரமணிக்கு மீனுட்சி அம்மன் கோயிலுக்குப் போவதென்ருலே ஆனந்தம்தான் ! அங்கே ஒவ்வொரு தூணிலும் உள்ள அழகிய சிலை களேப் பார்த்துப் பார்த்து அவன் பரவசப்படுவான். மேலும், அங்குள்ள திருவிளையாடல் சிற்பங்களைக் காட்டிக்காட்டி மாலதிக்கு அவன் பல கதைகளைச் சொல்லுவான். ரமணியும் மாலதியும் கைகோத்துக் கொண்டு அந்தப் பெரிய கோயிலை ஆனந்தமாகச் 1508 –1 i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/161&oldid=807896" இலிருந்து மீள்விக்கப்பட்டது