பக்கம்:பர்மா ரமணி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பர்மா ரமணி சுற்றி வருவதே அழகாகத்தானிருக்கும். மதுரைக்குத் தெற்கே ஐந்து மைல் துாரத்திலுள்ள திருப்பரங்குன் றத்துக்குச் சிற்சபேசன் வெள்ளிக்கிழமை தோறும் போய் வருவார். அப்போது ரமணி அவர்கூடச் செல்வான். வடக்கே பன்னிரண்டு மைல் துாரத்தி லுள்ள அழகர் கோயிலுக்குக்கூட ஒரு தடவை எல் லோருமாகப் போய் வந்தார்கள். ரமணியின் அப்பா இறந்த பிறகு மதுரையில் ஒரு பணக்காரர் வீட்டிலே அவன் கொஞ்ச நாள் வேலைக்கு இருந்திருக்கிருன். அப்போது அவன் மதுரை மீனுட்சியம்மன் கோயிலைக் கூடச் சரியாகப் பார்த்ததில்லை. ஆல்ை, இப்போதோ அவன் சிற்சபேசன் செல்லும் இடத்துக்கெல்லாம் செல்கிருன், ரமணி மதுரைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஒடி விட்டன. இன்னும் ஒரு வாரத்தில் பர்மாவுக்குப் புறப் படவேண்டும். சென்னைக்குப் போய், அங்கிருந்து கப்பல் ஏறி, பர்மாவுக்குப் போகவேண்டும் என்பதை ரமணி தெரிந்துகொண்டான். உடனே, அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது. சென்னைக்குப் போனதும், மதுரகாயகத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும். அவரைப் பார்க்காமல் போனல் என் மனம் கிம்மதி அடையவே அடையாது' என்று கினைத்தான். அன்று, சிற்சபேசன், காமாட்சி அம்மாள், மாலதி, ரமணி கால்வரும் சென்னைக்கு ரயிலில் புறப்பட் まーリ受53Y了。 சென்னையை அடைந்ததும் அங்கிருந்த ஒரு பெரிய ஹோட்டலில் தங்கினர்கள். அன்று புதன் கிழமை. வெள்ளிக்கிழமை கப்பல் புறப்பட்டுவிடும். ஆகையால், அன்றே மதுரநாயகத்தைச் சந்தித்துவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/162&oldid=807898" இலிருந்து மீள்விக்கப்பட்டது