பக்கம்:பர்மா ரமணி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பர்மா ரமணி மதுரகாங்கத்தின் வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்ட ரமணி, என்ன இது! நாடகக் கொட்டகையும் பூட்டப்பட்டிருக்கிறது. மானேஜர் வீடும் பூட்டப்பட்டிருக்கிறதே !’ என்ருன். உடனே சிற்சபேசன் "எதற்கும் பக்கத்து வீட் டிலே கேட்டுப் பார்க்கச் சொல்லலாம்” என்று சொல்லி விட்டு, டாக்ஸி டிரைவரிடம், டிரைவர், இந்த வீட் டிலே குடியிருந்த நாடக சபா மானேஜரும், அவர் சம்சாரமும் எங்கே போயிருக்கிருர்கள் என்று அதோ அந்த வீட்டிலே கேட்டுப் பார்’ என்ருர், அவர் சொன்னபடி டாக்ஸி டிரைவர், பக்கத்து வீட்டுக்குச் சென்ருர், விசாரித்துப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, அடடே, பக்கத்து வீட்டு அம்மா சொன்ன பிறகுதான் எனக்குக்கூட ஞாபகம் வருகிறது. இந்த நாடக சபா டில்லிக்குப் போயிருக்கிறது, சார், மானேஜர், அவர் சம்சாரத்தையும் கூடவே அழைத்துக் கொண்டு போயிருக்கிருராம். வரப் பத்துப் பதினேந்து நாட்களாகுமாம்” என்ருர் என்ன ! டில்லிக்குப் போயிருக்கிருர்களா! திரும்பி வரப் பத்துப் பதினைந்து நாட்கள் ஆகுமா ?” என்று வியப்புடன் கேட்டான் ரமணி. ஆமாம், தம்பி! டில்லியிலே இப்போது கடக் கிறதே தேசிய நாடகவிழா, அதிலே கலந்து கொள்ளத் தான் இந்த சபாவும் போயிருக்கிறது. போய் நாலைந்து காளாகிறது.” டிரைவர் பேச்சைக் கேட்டதும், ரமணிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சு விட் டான். உடனே சிற்சபேசன், ரமணி, என்ன பண்ணு வது? சந்தர்ப்பம் சரியில்லை. நாம் எப்படியும் நாளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/164&oldid=807902" இலிருந்து மீள்விக்கப்பட்டது