பக்கம்:பர்மா ரமணி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமணிக்கு ஆபத்து! 181 மறுநாள் கப்பல் ஏறியாக வேண்டுமே!’ என்ருர், மதுரங்ாயகத்தைப் பார்க்க முடியாமல் போனது ரமணிக்கு வருத்த மாகத்தான் இருந்தது. ஆலுைம், என்ன செய்வது? - - 20. ரமணிக்கு ஆபத்து! மறுநாள் காலையில் சிற்சபேசனின் குடும்பத்தாரு உன் பர்மாவுக்குக் கப்பல் ஏறி விட்டான் ரமணி. முதல் வகுப்பில் அவர்கள் பிரயாணம் செய்ததால் வேண்டிய:வசதிகளெல்லாம் இருந்தன. டேபிள் டென் னிஸ், கேரம், செஸ், பில்லியார்ட்ஸ்-இப்படிப்பட்ட விளையாட்டுக்களுக்கும் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. மற்றவர்கள் விளையாடும்போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் ரமணியும் மாலதியும். ரமணிக்குத் தெரிந்த விளையாட்டு கேரம் ஒன்றுதான். அதைத் தினமும் கொஞ்ச நேரம் மாலதி யுடன் விளையாடுவான். மாலே கேரங்களில் கப்பலின் மேல் தளத்துக்கு மாலதியும் ரமணியும் போவார்கள் அங்கு கின்றுகொண்டு சுற்றி காலுபுறமும் பார்ப் பார்கள். எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணிராக இருக்கும். தண்ணிரின் நீல நிறத்தையும், அதில் குதித்து விளை யாடும் மீன்களையும் பார்ப்பதிலே அவர்களுக்கு ஒரு தனி ஆனந்தம். இப்படியே நான்கு நாட்கள் ஓடிவிட்டன. ஐந்தாவது நாள் காலை கப்பல் ரங்கூன் துறைமுகத்தை அடைந்தது. பர்மாவின் தலை நகரம் ரங்கூன். அங்கு தெரிந்தவர்கள் வீட்டிலே இரண்டு நாட்கள் தங்கியிருக் தார்கள். மூன்ரும் நாள் அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு மாந்தலே என்ற நகருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/166&oldid=807906" இலிருந்து மீள்விக்கப்பட்டது