பக்கம்:பர்மா ரமணி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 62 பர்மா ரமணி ரயிலே விட்டு இறங்கியதும் சிற்சபேசன் எல்லோ ரையும் அழைத்துக் கொண்டு அங்குள்ள தமது பங்க ளாவுக்குச் சென்ருர். அங்கு சென்றதும் சிற்சபேசன் ரமணியிடம், ரமணி, இன்று முதல் நீ என்னை எப்ப டித் தெரியுமா அழைக்க வேண்டும்? அப்பா என்று தான் அழைக்க வேண்டும். காமாட்சிதான் இனி உன் அம்மா. மாலதி உன் தங்கை, யார் கேட்டாலும் அப் படியே சொல்லிவிடு. காங்களும் அப்படித்தான் சொல் லுவோம். இனி உன்னை அளுதை யென்று யாரிடமும் சொல்ல வேண்டாம் !’ என்ருர், அவர் சொன்னதைக் கேட்டதும், ரமணிக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அடடா! அனுதை யாகிய என்னிடம் இவர்கள் எவ்வளவு அன்பு வைத் திருக்கிருர்கள்! இவர்களுக்கு கம்மால் பதிலுக்கு என்ன செய்ய முடியும்? இவர்கள் மனம் கோகாமல் கடந்து கொள்ள வேண்டும். நல்லவன் என்று பெயரெடுக்க வேண்டும்' என்று கினைத்துக் கொண்டான். மாக்தலே சென்ற சில காட்களுக்குள், அந்த நக ரைப் பற்றி ரமணி பல விஷயங்களைத் தெரிந்து கொண் டான். மாந்தலே மிகவும் பழமையான ஒரு நகரம். பர்மாவின் தலைநகராக அது ஒரு காலத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பெரிய கோட்டையும் அங்கே இருக்கிறது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியர் குண்டு போட்டதில் அங்கிருந்த பல வீடுகள் அழிந்து சாம்பலாகி விட்டன. இப்படிப்பட்ட விஷயங்களுடன் இன்னெரு முக்கியமான விஷயத்தையும் ரமணிக்குச் சிற்சபேசன் கூறியிருந்தார். ஒருநாள் அவர் அவனுடன் பேசிக்கொண்டிருந்த போது, 'ரமணி! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/167&oldid=807908" இலிருந்து மீள்விக்கப்பட்டது