பக்கம்:பர்மா ரமணி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமணிக்கு ஆபத்து! 163 கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்த ஊரில் இரண்டு இரண்டரை வருஷத்துக்கு மேல் இருந்திருக் கிருர்’ என்ருர். அகமது நேதாஜியா? எந்தத் தெருவில் குடியிருக் தார்?' என்ருன் ரமணி.

இங்கே நம்மைப் போல் குடியிருக்கவில்லை. சிறை யில் இருந்தார்!’

சிறையிலா! என்ன காரணம்?" காரணமென்ன, இந்தியா சுதந்திரம் அடைவதற் குப் பாடுபட்டாரே, அதுதான் காரணம். ஆங்கிலேயர் அவரை இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவந்து சிறையில் வைத்திருந்தார்கள்.” 'அடடே, அப்படியா !” "ஆமாம். நேதாஜி மட்டும்தான் இங்கு இருந்தார் என்று கினைத்துவிடாதே சுதந்திரம் எமது பிறப் புரிமை என்று வீர முழக்கம் செய்தாரே திலகர், அவர் கூட இந்த ஊர் ஜெயிலில் ஆறு வருஷம் இருந்திருக் கிருர். இங்கே இருந்தபோதுதான் அவர் கீதா ரகசியம்’ என்ற புத்தகத்தை எழுதினர்.' திலகர்கூட இங்கே இருந்திருக்கிருரா!' என்று கேட்டான், ஆமாம், அவர்களெல்லாரும் கம் தேச விடுதலை க் காகத் தவம் கிடந்த இடம்தான் மாந்தலே ' சிற்சபேசன் கூறியதைக் கேட்டதும், ரமணி அத் தலைவர்களை நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டான். ரமணி அந்த நகரைப் பற்றித் தெரிந்துகொண்ட தோடு, அங்கு பேசப்படும் பர்மிய பாஷையையும் கற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/168&oldid=807910" இலிருந்து மீள்விக்கப்பட்டது