பக்கம்:பர்மா ரமணி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 பர்மா ரமணி றுக்கொள்ள ஆரம்பித்தான். அவனுக்கும், மாலதிக்கும் பர்மிய பாஷையைக் கற்றுக் கொடுக்க ஓர் ஆசிரியரை ஏற்படுத்தினர் சிற்சபேசன். ரமணி ஆறு மாதங்களில் பர்மிய பாஷையைக் கூடுமானவரை நன்ருகக் கற்றுக்கொண்டுவிட்டான்; அழகாகப் பேசுவான்; தடங்கல் இல்லாமல் படிப்பான். மாலே கேரங்களில் மாலதியையும், அக்கம்பக்கத்தி லுள்ள குழந்தைகளையும் கூட்டி வைத்துக்கொண்டு, ரமணி பர்மிய பாஷையில் கதைகளெல்லாம் சொல்லு வான். நாடக சபாவிலே இருந்ததால், அங்கே பார்த்த நாடகங்களைக் கதைகளாகக் கூறுவான். காள் ஆக ஆக, அந்த வட்டாரத்திலுள்ள இந்தி யக் குழந்தைகள், பர்மியக் குழந்தைகள் எல்லோருமே ரமணியின் கதையைக் கேட்கத் திரண்டு வந்துவிட்டார் கள். எத்தனை காட்களுக்குத்தான் படித்த கதைகளை யும் கேட்ட கதைகளையுமே சொல்லிக் கொண்டிருப்பது? நாளடைவில் அவனே கற்பனைசெய்து பல நல்ல கதை களேயெல்லாம் கூற ஆரம்பித்துவிட்டான். இதனுல் ரமணியின் பெயர் அந்த வட்டாரத்திலே மிகவும் பிரபல மாகி விட்டது! சிற்சபேசனும் காமாட்சி அம்மாளும், இப்படிப் பட்ட ஒரு பையன் நமக்குக் கிடைத்ததே கம் அதிர்ஷ் டம்தான் என்று கினைத்து ஆனந்தமடைவார்கள், மாலதியோ, ரமணி அண்ணுவின் கதையைக் கேட்க நம் வீடு தேடி எத்தனை பேர் வருகிருர்கள்!” என்று எண்ணிப் பெருமைப்படுவாள். ஆனல், ரமணி விரைவிலேயே இவர்களை விட்டுப் பிரியப் போகிருன் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? அது ரமணிக்கே தெரியாதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/169&oldid=807912" இலிருந்து மீள்விக்கப்பட்டது