பக்கம்:பர்மா ரமணி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. இருண்ட குகையில் மூன்று நிமிஷமாகியும் காமாட்சி அம்மாளுக்கு மயக்கம் தெளியாதலால், ரமணிக்குப் பயம் அதிகமாகி விட்டது. சரி, சரி ! இனியும் இங்கு இருப்பதில் பயனில்லை. உடனே ஒடிப்போய் நமது டாக்டரை அழைத்து வருவதே நல்லது ' என்று தீர்மானித்தான். மறு நிமிஷம், சிற்சபேசனிடம்கூடக் கூருமல், தலை தெறிக்க அவர்களது குடும்ப டாக்டர் வீட்டை நோக்கி வேகமாக ஓடினுன். டாக்டர் வீட்டுக்கு இன்னும் ஒரு பர்லாங் தூரம் கூட இல்லை. ஒரு சக்திலே ரமணி வேகமாக ஒடிக் கொண்டிருந்தான். அப்போது, யாரோ இருவர் திடீ ரென்று அவன் மேல் பாய்ந்தார்கள். அதர்களில் ஒருவன் தன் கைகளால் ரமணியின் வாயைப் பலமாகப் பொத்தினன். மற்ருெருவன் ஒரு முரட்டுத் துணியால் ரமணியின் முகத்தை கன்ருக மூடிவிட்டான். ரமணிக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படியாவது அவர்களிட மிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்று கையை யும், காலையும் ஆட்டிப்பார்த்தான். அசைக்க முடியாத படி அந்த முரடர்கள் இரும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டார்கள். வாய்திறந்து கத்தவும் முடியாதபடி செய்துவிட்டார்கள். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சி யால் ரமணி மூர்ச்சையடைந்து விட்டான். ரமணி கண் விழித்துப் பார்த்தபோது, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எழுந்து உட்கார்ந்துகொண்டு, காம் எங்கே இருக்கிருேம் ? என்ற கலவரத்தோடே பார்த்தான். அவன் இருந்த இடத்தில் மின்சார விளக்குகள் இல்லை : ஒரே ஒரு பழங்காலத்து லாந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/174&oldid=807926" இலிருந்து மீள்விக்கப்பட்டது