பக்கம்:பர்மா ரமணி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

463 பர்மா ரமணி காமாட்சி அம்மாளுக்கு முன்பு இரண்டு மூன்று தடவைகள் பலவீனத்தால் இப்படி மயக்கம் வந்த துண்டு. இது ரமணிக்குத் தெரியாது. - சற்று கேரத்தில் காமாட்சி அம்மாள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். உடனே சிற்சபேசனின் முகம் மலர்ந்துவிட்டது, அம்மா !” என்று மாலதி ஆசையா கக் கூப்பிட்டாள். சிறிது நேரத்தில் காமாட்சி அம்மாள் எழுந்து உட்கார்ந்தாள். மறுகிமிஷம், 'ரமணி எங்கே?' என்று கேட்டாள். உடனே மாலதி, ரமணி அண்ணு ரமணி அண்ணு: அம்மா எழுந்துவிட்டாள்!” என்று ஆனந்த மாகக் கூறிக்கொண்டே சுற்று முற்றும் பார்த்தாள், ரமணி அங்கே இல்லை! வாசல் பக்கத்திலும் காளுேம்' மாடியிலும் அவன் இல்லை! ரமணியைக் காணுத மாலதி, ஐயோ! ரமணி அண்ணுவைக் காளுேமே !’ என்ருள். உடனே சிற் சபேசனும், ரமணி. ரமணி!” என்று பலமாகக் கூவிஞர். ரமணி வரவில்லை. எங்கே போயிருப்பான் ? சொல்லாமல் போக மாட்டானே : ஒருவேளை டாக்டர் ஆனந்தராவ் வீட்டுக் குப் போயிருப்பாணுே ' என்று கினைத்து வேலைக் காரர்களை டாக்டர் வீட்டுக்கு அனுப்பினர். அங்கேயும் ரமணி இல்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தேடிப் பார்க்கச் சொன்னர். அந்த வட்டாரம் முழுதும் அலசிப் பார்த்தும் ரமணியைக் காளுேம் 1. எல்லோருக்கும் ஒரே திகிலாயிருந்தது :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/173&oldid=807923" இலிருந்து மீள்விக்கப்பட்டது