பக்கம்:பர்மா ரமணி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமணிக்கு ஆபத்து ! 167 விட்டது; க ண் க ள் மூடிக்கொண்டன. பற்கள் கிட்டித்து விட்டன : இதைப் பக்கத்திலிருந்த (Lឲាអ៊ី பார்த்ததும் திடுக்கிட்டான் ; ஆ, அம்மா !” என்று கதறினன். சத்தத்தைக் கேட்டு மாடியிலிருந்த சிற்ச பேசனும், மாலதியும் கீழே ஓடி வந்தார்கள். 'ஐயோ! இது என்ன ! அம்மா இப்படி விழுந்து விட்டார்களே !’ என்று ரமணி கையைக் கசக்கினன். அவன் கண்களும் கலங்கின. மாலதி, அம்மா பக்கத்திலே ஓடிவந்து பார்த்ததும், 'அம்மா! அம்மா!' என்று கலக்கத்தோடு கூவினுள். உடனே சிற்சபேசன், 'ரமணி, மாலதி, கொஞ்சம் தள்ளி யிருங்கள். காற்று கன்ருக வரட்டும்” என்ருர். உடனே ரமணி விலகி கின்றுகொண்டு, கான் ஒடிப்போய்டாக்டரை அழைத்துக்கொண்டுவரட்டுமா? வேண்டாம். இரண்டொரு நிமிஷத்துக்கு இப் படித்தான் இருக்கும். அப்புறம், தானுக எழுந்துவிடு வாள். நீ விசிறி சுவிட்சைப் போட்டுவிட்டு, செம்பிலே தண்ணிங் கொண்டுவா’ என்ருர். உடனே ரமணி சுவிட்சைப் போட்டுவிட்டு, ஒரு கொடியில் செம்பு கிறையத் தண்ணிர் கொண்டு வந்தான். தண்ணிரைக் காமாட்சி அம்மாள் முகத் திலே தெளித்தார் சிற்சபேசன், ஒரு கிமிஷம் ஆகி, இரண்டு நிமிஷங்களும் ஆகிவிட்டன. அதற்கு மேலும் ஒரு நிமிஷம் ஆகிவிட்டது. ஆலுைம், காமாட்சி யம்மாள் எழுந்திருக்கவில்லை. அதுவரை கவலைப் படாமல் இருந்த சிற்சபேசன் முகத்திலும் கவலை ஏற்பட்டது. ரமணிக்குத் திகில் மிகவும் அதிகமாகி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/172&oldid=807921" இலிருந்து மீள்விக்கப்பட்டது