பக்கம்:பர்மா ரமணி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருண்ட குகையில் 17 f உடனே அந்தத் தலைவன், ஏன் தம்பி அழுகிருப்? உன் அம்மாவுக்கு உடம்பு சரியாகிவிடும். கவலைப் படாதே ! உனக்கு இப்போது ஆகாரம் தரச் சொல்லு கிறேன். சாப்பிட்டுவிட்டுச் சுகமாகத் தூங்கு, காலையில் பேசிக்கொள்ளலாம்’ என்று கூறிவிட்டு, சுப்பையா, தம்பிக்கு ஆகாரம் கொண்டு வா’ என்று அங்கிருந்த தமிழனைப் பார்த்து உத்தரவிட்டான். உடனே ரமணி, வேண்டாம், வேண்டாம், எனக் குப் பசியே இல்லை. என்னை எப்படியாவது டாக்டர் ஆனந்தராவ் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் ' என்று மிகவும் கெஞ்சிக் கேட்டான்.

தம்பி, வீணுக அலட்டிக்கொள்ளாதே ! உன் அப்பா மனசு வைத்தால், நீ வெகு சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம் ' என்ருன் தலைவன்.
என்ன ! என் அப்பா மனசு வைக்க வேண்டுமா ? அவர்தான் எப்போதோ இறந்து போய்விட்டாரே!”

ரமணி இப்படிச் சொன்னதும் தலைவன் பலமாக ஒரு சிரிப்புச் சிரித்தான். பிறகு, ஒஹோ : அப்பா இறந்து போய்விட்டார் என்ருல், நாங்கள் உன்னை விட்டுவிடுவோம் என்றுதானே கினைக்கிருய் ? அது தான் கடக்காது. உன் அப்பா சிற்சபேசனை எங்களுக் குத் தெரியாதென்று கினைத்துவிடாதே அவர்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி இன்னும் உயிரோடு இருக் கிருரே ' என்ருன். "ஐயோ கான் ஒர் அைைத. சிற்சபேசன் என் அப்பா இல்லே ' என்று ரமணி சொல்லும்போதே, சரி, சரி. இப்போது அதைப் பற்றி என்ன கவலை ? பேசாமல் படுத்துத் துங்கு. காலையில் பார்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/176&oldid=807930" இலிருந்து மீள்விக்கப்பட்டது