பக்கம்:பர்மா ரமணி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பர்மா ரமணி கொள்ளலாம் ' என்று கூறிவிட்டுத் தலைவன் அங் கிருந்த ஒரு கட்டிலில் படுத்துக்கொண்டான். மற்ற வர்களும் அங்கேயே படுத்துக் கொண்டார்கள். ரமணிக்குத் துக்கம் வரவில்லை. அப்பா மனசு வைத்தால் சீக்கிரம் போய்விடலாம் என்ருன் இந்த முரடன். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாகச் சொல்ல மாட்டேன் என்கி ருனே அது என்ன வாக இருக்கும் ?’ என்று. யோசித்துப் பார்த்தான். அதற்குள் காமாட்சி அம் மாள், சிற்சபேசன், மாலதி முதலியோரது நினைவு வந்துவிட்டது. அத்துடன், காளை கதை கேட்கக் குழந்தைகளெல்லாம் வருவார்களே ! அவர்களுக் கெல்லாம் எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும் !’ என்ற கவலையும் சேர்க் துகொண்டது. இவற்றை யெல்லாம் நிஇனத்து கினைத்துக் கண்ணிர் விட்க்ெகொண்டே இருந்தான். - வெகு கேரம் ஆயிற்று. துரங்கிக்கொண்டிருந்த தலைவன் சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்தான். உடனே ஒரு பெரிய கொட்டாவி விட்டான். பிறகு, டேய், டேய், எல்லோரும் எழுந்திருங்கள். பொழுது விடிந்து விட்டது ' என்று கத்தின்ை. சத்தம் கேட்டு மற்ற மூவரும் எழுந்தார்கள். அப்போதுதான் சமனிக் குப் பொழுது விடிந்துவிட்டது என்பது தெரிந்தது. அந்தக் குகை இரவிலும் பகலிலும் ஒரே இருட்டாகத் தான் இருந்தது. சூரிய வெளிச்சம்தான் அங்கே நுழைய முடியாதே ! எழுந்தவுடனே அந்த முரடர்கள் அங்குள்ள விளக்குகளே யெல்லாம் ஏற்றினர்கள். எல்லாம் அகல் விளக்குகள் விளக்குகளை யெல்லாம் ஏற்றியதும், குகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/177&oldid=807932" இலிருந்து மீள்விக்கப்பட்டது