பக்கம்:பர்மா ரமணி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருண்ட குகையில் 173 யில் வெளிச்சம் கன்ருகத் தெரிந்தது. ரமணி அக்த வெளிச்சத்தில் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான். குகையில் ஒரு மூலையைப் பார்த்ததும், ரமணிக்கு ஆச்சரியமாயிருந்தது. 'யாரது கம்மைப் போல் அங்கே ஒரு பையன் உட்கார்ந்திருக்கிருனே ' என்று கூர்ந்து பார்த்தான். ஆம், ஒரு பையன் மூலையிலுள்ள ஒரு பாறை மேல் உட்கார்ந்திருந்தான். அவன் ரமணியைவிடக் கொஞ்சம் சின்னவன். அவனும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவளுகத்தான் இருந்தான். இவன் யார்? எப்படி இங்கே வந்தான்? ஒரு வேளே இவர்கள் பிள்ளை பிடிக்கிறவர்களோ...! என்று கினைத் துக்கொண்டே அந்தப் பையனையே ரமணி உற்றுப் பார்த்தான். அந்தப் பையனும் ரமணியைப் பார்த்து விட்டான். உடனே அவன் ஒரு புன் சிரிப்புச் சிரித்தான, வேறு ஒன்றும் செய்யவில்லை. ரமணியும் அந்தப் பைய னும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள் ! சிறிது நேரம் சென்றது. சுப்பையா என்பவன் ஒரு தட்டிலே ஆகாரம் கொண்டு வந்து ரமணியின் முன்னுல் வைத்தான். உடனே ரமணி, எனக்கு எது வும் வேண்டாம். எடுத்துப் போ' என்று கோபமாகக் கூறினுன்,

  • தம்பி, இது மாமியார் வீடு இல்லை. பிகு பண்ணு மல் சும்மா சாப்பிடு ' என்று கேலியாகக் கூறிவிட்டு, சுப்பையா அந்த இடத்தைவிட்டுப் பாறைமேல் இருந்த பையனிடம் சென்ருன். இன்னுெரு தட்டிலிருந்த ஆகா ரத்தை அவனிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். அந்தப் பையன் ஐந்து நிமிஷத்தில் தட்டைக் காலி செய்துவிட்டு ரமணியைப் பார்த்தான். :நீயும் சாப்பிடு”

1501-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/178&oldid=807934" இலிருந்து மீள்விக்கப்பட்டது