பக்கம்:பர்மா ரமணி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பர்மா ரமணி என்று சைகை மூலம் கூறினன். ஆலுைம், ரமணி சாப் பிடவில்லை. அழுதுகொண்டே யிருந்தான். சிறிது நேரம் சென்றதும், நாலு முரட்ர்களும்ரமணி யிருந்த இடத்துக்கு வந்தார்கள். 'தம்பி, இன்னும் சாப் பிடவில்லையா? சரி, அதோ அந்த சுந்தரம் உனக்குத் துணையாக இருப்பான். பயப்படாமல் இரு. நாங்கள் வெளியில் ஒரு வேலையாகப் போகிருேம் ' என்று சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள், அவர்கள் போனதும் அந்தப் பையன் . சுந்தரம் . ரமணியின் அருகிலே வந்தான். உடனே ரமணி கண் ரீைரைத் துடைத்துக்கொண்டு, தம்பி, நீ யார் ? இங்கு எப்படி வந்தாய்?" என்று கேட்டான்.

என் அப்பா பெயர் தாமோதரம். ஐராவதி நதிக்கு அந்தப் பக்கம் இருக்கிறதே அமரபுரா, அங்குதான் என் வீடு இருக்கிறது. என் அப்பா ஒரு பெரிய மர வியாபாரி. அன்று ஒரு காள் நானும் என் அப்பாவும் யானைமேல் ஏறிக்கொண்டுதேக்குமரக் காட்டுக்குப் போயிருந்தோம். இரவு நேரத்தில் அங்கிருந்த கூடாரத்தில் படுத்து கன்ருகத் துரங்கிக்கொண்டிருந்தோம். பிறகு, என்ன கடந்தது என்று எனக்குத் தெரியாது. நான் கண்களை விழித்துப் பார்த்தபோது இங்கே இருந்தேன். ! எதற் காக என்னை இங்கே கொண்டுவந்தார்கள் என்பதே தெரியவில்லை!’
  • அப்படியா ! உனக்கும் தெரியாதா?”
ஆமாம், என் அப்பா மனசு வைத்தால், கான் சீக்கிரம் போய்விடலாமாம் ! இதைத்தான் கேட்கிற போதெல்லாம் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்லு கிருர்கள். விவரமாகச் சொன்னுல்தானே தெரியும் ? என்ருன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/179&oldid=807936" இலிருந்து மீள்விக்கப்பட்டது