பக்கம்:பர்மா ரமணி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பர்மா ரமணி என்று கூறிக்கொண்டே பிரம்பால் ரமணியின் காலிலே இரண்டு அடி கொடுத்தான். அடி விழுந்த இடம் வலிக் கத்தான் செய்தது. ஆலுைம், ரமணி பல்லேக் கடித்துக் கொண்டு அப்படியே கின்ருன். தலைவனின் ஆத்திரம் அதிகமாயிற்று. எழுதப் போகிருயா, இல்லையா ? என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே ரமணி யின் வலது காலிலும் இடது காலிலும் மாறி மாறி அடித்தான். வலி தாங்கமுடியாமல் ரமணி எழுதிக் கொடுத்துவிடுவான் என்றே தலைவன் எதிர்பார்த்தான். ஆல்ை, ரமணி அடிக்குப் பயந்து சரணுகதி அடைந்து விடவில்லை. முடியாது, முடியாது என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான் . ரமணியின் பிடிவாதம் அதிகமாக ஆகத் தலைவ னின் ஆத்திரம் அதிகமாகிக்கொண்டே வந்தது. அந்த ஆத்திரத்தில் அவன் ரமணியினுடைய கை, கால், முதுகு எல்லா இடங்களிலும் மாறி மாறி அடித்தான். ரமணியும் கண்ணிர் சொரிந்தபடி அடிகளே வாங்கிக் கொண்டு அந்த இடத்திலேயே கின்ருன். எவ்வளவு நேரத்துக்குத்தான் அவனுல் அப்படி கிற்க முடியும் ? தலைவன் முதுகிலே பலமாக ஓர் அடி கொடுத்தபோது, ரமணி ஐயோ!' என்று அலறிக்கொண்டே கீழே சாய்ந்துவிட்டான். அதே சமயம், இவ்வளவு நேரமாக நடந்ததை யெல்லாம் வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் குப் பென்றுபாய்ந்து தலைவனின் எதரே வந்து நின்ருன். ஐயா ! ரமணி மிகவும் கல்லவன். அவனை இப்படி மாட்டை அடிப்பதுபோல் அடிக்கிறீர்களே ! தயவு செய்து கிறுத்துங்கள்’ என்று தடுத்துச் சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/187&oldid=807954" இலிருந்து மீள்விக்கப்பட்டது