பக்கம்:பர்மா ரமணி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரத்தின் உதவி 181 என்னே இவ்வளவு நாட்களாக அவர் காப்பற்றி வந்ததே பெரிய காரியம். இனிமேலும் அவர் எனக்காகப் பத்தா யிரம் கொடுப்பதா ? வேண்டாம். வேண்டவே வேண் டாம். கான் கடிதம் எழுதித் தரமாட்டேன். தர முடி யாது” என்று உறுதியாகச் சொன்னுன் ரமணி. இதைக் கேட்டதும் தலைவனுக்குக் கோபம் வந்து விட்டது. டேய் பையா நீ யாரை ஏமாற்றப் பார்க்கி ருய் ! நீயா அைைத எல்லாம் எனக்குத் தெரியும். வீணுக ஆபத்தைத் தேடிக் கொள்ளாதே இதோ, இதில் நான் சொல்லுவதுபோல் எழுதிக்கொடு ' என்று கூறிக் காகிதத்தையும் பேணுவையும் ரமண யின் முன்னுல் நீட்டினன் தலைவன். ரமணி அதை வாங்கவில் இல. "என் உயிருக்கே ஆபத்து வந்தாலும் சரி; கடிதம் எழுதித் தரமாட்டேன். எனக்காக இன்னுெருவர் எதற்காகப் பணம்-அதுவும் பத்தாயிரம் தரவேண்டும்? முடியாது; எழுத முடியாது” என்று திரும்பவும் ஆணித்தரமாகப் பதில் சொன்னன். 'முடியாதா? சரிதான் ! காரியம் அவ்வளவு தூரத் துக்கு முற்றிவிட்டதா? பார் உன்னை இப்போதே கடிதம் எழுத வைக்கிறேன்” என்று மிகவும் கோப மாகக் கூறிக்கொண்டே அங்கிருந்த ஒரு நீண்ட பிரம்பைக் கையில் எடுத்தான். இப்போது என்ன சொல்லுகிருய் ?’ என்று கேட்டுக்கொண்டே பிரம்பை ஓங்கினன். பிரம்பைக் கண்டு ரமணி பயப்பட்டு விடவில்லை. அசையாமல் அங்கேயே கின்ருன் ! பிரம்டை ஓங்கிய போதும், ரமணி அசையாமல் கிற்பதைக் கண்ட தலைவனுக்குக் கோபம் அபாரமாக வந்துவிட்டது. என்ன ஆணவம் இந்தப் பயலுக்கு '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/186&oldid=807952" இலிருந்து மீள்விக்கப்பட்டது