பக்கம்:பர்மா ரமணி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரத்தின் உதவி 183 "அடேயப்பா அந்த நல்ல பையனுக்கு இந்த நல்ல பையன் சிபார்சா?’ என்று கேலியாகக் கேட்டான் தலைவன். "ஐயா! அவனை இதற்குமேல் அடித்தால், அவன் உயிரே போனுலும் போய்விடும். உயிர்போய் விட்டால்: உங்களுக்குப் பணம் எப்படி வரும் : தயவு செய்து, இப்போது அவனைச் சும்மா விட்டுவிடுங்கள். காலையில் கான் எப்படியாவது சமாதானப்படுத்திக் கடிதம் வாங்கித் தருகிறேன் என்ருன் சுந்தரம். கிச்சயமாகவா ? சரி, காளைக் காலையிலும் அவன் இதேபோல் தகராறு செய்தானே, அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்’ என்று கூறி, பிரம்பை ஒரு மூலையில் எறிந்துவிட்டுச் சாப்பிடச் சென்ருன் தலைவன். அன்று இரவு குகையில் எல்லோரும் கன்ருகத் துங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனல், ரமணிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அடி விழுந்த இடங்களைத் தன் கைகளால் கன்ருகத் தடவி விட்டுக் கொண்டிருந் தான். மணி பன்னிரண்டுக்குமேல் இருக்கும். அப்போது ரமணியின் பக்கத்தில் படுத்திருந்த சுந்தரம், மெதுவா கக் கண்களை விழித்தான். சுற்றிலும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் ரமணியைத் தவிர மற்ற எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே ரமணியின் முகத்திற்குப் பக்கத்தில் தனது முகத்தைக் கொண்டு போனன் தாழ்வான குரலில், :ரமணி!" என்ருன். ரமணி திரும்பிப் பார்த்தான். என்ன சுந்தரம் ? என்று மெதுவான குரலில் கேட் i. ss (of,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/189&oldid=807958" இலிருந்து மீள்விக்கப்பட்டது