பக்கம்:பர்மா ரமணி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பர்மா ரமணி 'ஒன்றுமில்லை. கை கால்களெல்லாம் வலிக்குமே!’ என்று கேட்டுக்கொண்டே சுந்தரம் ரமணியின் கை களைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தான். கந்தரம், வேண்டாம். பேசாமல் படுத்துக்கொள்' என்ருன் ரமணி. சுந்தரம் விடவில்லை. தடவிக்கொடுத் துக்கொண்டே திரும்பவும் சுற்று முற்றும் பார்த்தான். அப்போது அவர்களின் தலைப் பக்கமாகப் படுத்திருந்த சுப்பையா என்பவன் கொஞ்சம் அசைவதுபோல் அவ னுக்குத் தெரிந்தது. இவன் விழித்துக் கொண்டிருக் கிருனே !’ என்று சந்தேகப்பட்டு, சுந்தரம் அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆல்ை, அவன் மறுபடி அசையவில்லை. ஆகையால், அவன் மிகவும் கன்ருகத் துரங்குகிருன் என்று சுந்தரம் நினைத்தான். பிறகு ரமணியின் உடம்பில் அடி விழுந்த இடங்களைத் தடவிக் கொடுத்துக்கொண்டே, ரமணி! நீ ஏன் இப்படிப் பிடிவாதம் செய்கிருய் பேசாமல் அவர்கள் சொன்னபடியே நீ எழுதிக் கொடுத்துவிடு !” எனருன.

சுந்தரம், சிற்சபேசன் என் சொந்த அப்பா என் பதை நீயும் நம்புகிருயா ? அவர் எனக்கு அப்பாவு மில்லை; நான் அவருக்கு மகனும் இல்லை. அவர் என் துரத்து உறவினர்கூட இல்லே "
நிஜமாகவா மணி !”

எசுந்தரம், இவர்கள் தான் என் பேச்சை கம்ப வில்லை. யோவது நம்புவாய் என்றே நினைக்கிறேன். நான் பிறந்தது வேலங்குறிச்சி என்ற ஊரில். மதுரைக் குப் பக்கத்திலே அது இருக்கிறது. நான் பிறந்ததும் என் அம்மா முத்துலட்சுமி ஜன்னி கண்டு இறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/190&oldid=807962" இலிருந்து மீள்விக்கப்பட்டது