பக்கம்:பர்மா ரமணி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரத்தின் உதவி 185 விட்டாள். என் அட்டா வேலாயுதமும் கொஞ்ச காலத் துக்கு முன்னுல் காய் கடித்து இறந்து போனுர்’ என்று ஆரம்பித்துத் தன் கதையைச் சுருக்கமாகக் கூறி முடித்தான் ரமணி. " அப்படியா ரமணி, நீ சொல்லுவதெல்லாம் உண்மை என்று நான் கம்புகிறேன் ஆலுைம்,இவர்கள் கம்பமாட்டார்களே ! இவர்களுக்குப் பணம்தான் குறி என்று தெரிகிறது. நீ பேசாமல் கடிதம் எழுதிக் கொடுத்துவிடு. சிற்சபேசனே பணம் தருவதாக எழுதி யிருக்கிருரே ! நீ இங்கு இருப்பதைத் தெரிந்து கொள் வதற்குத்தான் அவர் உன் கைப்படக் கடிதம் வேண்டும் என்கிருர் உன் கடிதம் போனல், சீக்கிரம் பணம் வரும். உனக்கும் சீக்கிரம் விடுதலை கிடைத்துவிடும்’ என்ருன் சுந்தரம் விடுதலை கிடைத்தால் எனக்கும் சந்தோஷம்தான். ஆலுைம், எனக்கு ஒரு சந்தேகம். இவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு என்னைத் திருப்பி அ னுப்பாமலே வைத்துக் கொண்டால்...?” 'ரமணி, அது மாதிரி கடக்காது. இங்கேயே உன்னே வைத்துக்கொண்டால் உனக்குச் சாப்பாடு போட வேண்டாமா? கட்டாயம் பணம் வந்ததும் கொண்டுபோய் விட்டு விடுவார்கள். தயவு செய்து எனக்காகவாவது நீ நாளைக்குக் கடிதம் எழுதிக் கொடுத்துவிடு. ” சரி, காலையில் பார்த்துக் கொள்ளலாம். பேசாமல் படுத்துக்கொள் ' என்று கூறினுன் ரமணி. சுந்தரம் படுத்துக் கொண்டான். ரமணியும் இரவு வெகுநேரம் விழித்திருந்ததால், அயர்ந்து தூங்கலான்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/191&oldid=807964" இலிருந்து மீள்விக்கப்பட்டது