பக்கம்:பர்மா ரமணி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ரமணி கிடைத்தான் ! மறு நாள் காலே. பொழுது விடிந்தது. வழக்கம் போல் காமாட்சி அம்மாள் கோலப் பொடியைக் கையில் எடுத்துக்கொண்டு பங்களா வாசலை நோக்கி வந்தாள். வாசல் கதவைத் திறந்ததும் வராந்தாவில் யாரோ படுத்திருப்பதைக் கண்டாள். உடனே, "யாரது ' என்று பார்த்தாள். மறுநிமிஷம், ஆ ரமணி என் ரமணியா !” என்று கூவிக்கொண்டே அருகிலே ஒடி ள்ை; உற்றுப் பார்த்தாள்; கன்ருக உற்றுப் பார்த் தாள். சந்தேகமில்லை; அவன் ரமணிதான் ! காணுமற் போன ரமணியேதான் அங்கே படுத்துக் கொண்டிருக் தான் உடனே, ரேமணி ரமணி ! என்று குது.ாகலத் துடன் தட்டி எழுப்பினுள் காமாட்சி அம்மாள். ரமணி மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். காமாட்சி அம்மாளைக் கண்டதும், அம்மா !” என்று அவளைப் பாசத்தோடு கட்டிப் பிடித்துக்கொண்டான். மறு கிமிஷம், என்ன இது? கனவா கனவா ! எப்படி கான் இங்கு வந்தேன் பக்கத்தில் படுத்திருந்த சுந்தரம் எங்கே ?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ரமணி.

என்ன ரமணி, உனக்கே தெரியாதா! கடப்ப தெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது...சரி வா, உள்ளே போகலாம் ” என்று கூறி அவனே அப்படியே அனைத்தபடி உள்ளே அழைத்துச் சென்ருள் காமாட்சி அம்மாள்.

உள்ளே செல்லும்போதே, இதோ ரமணி ரமணி வந்துவிட்டான் !” எ ன் று இரைந்துகொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/192&oldid=807966" இலிருந்து மீள்விக்கப்பட்டது