பக்கம்:பர்மா ரமணி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமணி கிடைத்தான் ! 187 சென்ருள். சத்தத்தைக் கேட்டதும், படுக்கையில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சிற்சபேசன் திரும்பிப் பார்த்தார். ரமணியைக் கண்டதும், சட்டென்று எழுந் தார். ஒரே தாவாகத் தாவி அவனிடம் ஓடிவந்தார். "ஆ, ரமணி ' என்று கட்டித் தழுவிக் கொண்டார். அதற்குள் காமாட்சி அம்மாள் துரங்கிக் கொண்டிருந்த மாலதியைத் தட்டி எழுப்பி, மாலதி 1 மாலதி ரமணி அண்ணு வந்துவிட்டான் ! ரமணி அண்ணு வந்து விட்டான் ! எழுந்திரு, எழுந்திரு ' என்று ஆனந்த மாகக் கூறினுள். உடனே மாலதி பரபரப்போடு எழுக் தாள்; கிமிர்ந்து பார்த்தாள். அதற்குள் ரமணி மாலதி யின் எதிரே ஓடி வந்து, அவளது இரு தோள்களையும் பிடித்துக் கொண்டு, மாலதி!” என்ருன்,

அண்ணு எங்களை யெல்லாம் விட்டுவிட்டு கீ எங்கே அண்ணு போயிருந்தாய் ? நீ இல்லாது எங் களுக்கெல்லாம் எவ்வளவு கவலையாக இருந்தது ? விளையாட முடியவில்லை; கதை கேட்க முடியவில்லை; எதுவுமே செய்ய முடியவில்லை' என்ருள் மாலதி.

சற்று நேரத்துக்குள் ரமணி திரும்பி வந்த விஷயம் அந்த வட்டாரம் முழு வ தும் தெரிந்துவிட்டது. குழந்தைகளெல்லாரும் குது கலத்தோடு, ர ம ணி அண்ணு'வைப் பார்க்க ஓடோடி வந்தார்கள். பெரிய வர்களும் வந்திருந்தார்கள். எல்லோரும் அவனைச் சூழ்ந்துகொண்டு, அவன் எங்கே போனன்? எப்படிப் போனுன், என்னென்ன செய்தான் என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்போது சிற்சபேசன், : ரமணி, அன்று இரவு கீ காணுமற் போனதிலிருந்து நடந்ததை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/193&oldid=807967" இலிருந்து மீள்விக்கப்பட்டது