பக்கம்:பர்மா ரமணி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராதது ! 205

  • தம்பி, உனக்குக் காயம் எதுவும் இல்லையே ' என்ருன்.

எனக்கு ஒரு சிறு காயம்கூட இல்லை. என்மேல் அடி விழாமல், நீங்கள் தான் எல்லா அடிகளையும் வாங் கிக்கொண்டு விட்டீர்களே ! முரடர்கள் இப்படியா அடிப்பது 1 ஐயோ, என்னுல் அல்லவா உங்களுக்கு இந்தக் கஷ்டம்.இப்போது வலி எப்படி இருக்கிறது:”

இனி எதைப் பற்றியும் கவலையில்லை. நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன். சுந்தரம்,நான் போலீஸாரிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும், உடனே போலீஸார் வருவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா ?”

இதோ டாக்டரிடம் சொல்லி, போன் பண்ணச் சொல்லுகிறேன் ” என்று கூறி டாக்டரிடம் விஷயத் தைச் சொன்னன் டாக்டரும் உடனே போலிஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்களை வரச் சொன்னர். இதற்குள் அந்த மனிதன் சுந்தரத்திடம், கந்த ரம், ரமணியைப் பார்க்க வேண்டுமே உடனே அவ இனப் பார்க்க வேண்டும்” என்ருன். ரமணிதானே ! இதோ அழைத்துவரச் சொல்லு கிறேன்' என்று சு க் த ர ம் கூறிக்கொண்டிருக்கும் போதே, சுந்தரம் : சுந்தரம் !" என்று கத்திக்கொண்டு ஆஸ்பத்திரிக்குள் ஓடி வந்தான் ரமணி. அப்படியே சுந்தரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, கட்டிலில் கிடந்த மனிதனைப் பார்த்தான். பார்த்ததும், சுந்தரம், இவர்தான் உன்னைக் காப்பாற்றினரா ஐயோ! இவர் உடம்பெல்லாம் காயமாயிருக்கிறதே !’ என்ருன். 1501-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/211&oldid=808059" இலிருந்து மீள்விக்கப்பட்டது