பக்கம்:பர்மா ரமணி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பர்மா ரமணி உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லையே!” என்று அடிக்கடி அவன் கேட்டுக்கொண்டே யிருந்தான். கிச்சயமாகச் சொல்வதற்கில்லை ! தலையில் பல மான அடி. மயக்கம் தெளிய ஊசி போட்டிருக்கிறேன். இன்னும் அரை மணி நேரத்தில் மயக்கம் தெளிய லாம் ' என்ருர் டாக்டர். சுந்தரம் அந்த மனிதனுடைய கட்டில் ஒரமாக உட் கார்ந்துகொண்டு, அவனையே பார்த்துக்கொண்டிருந் தான். ஆஸ்பத்திரி விளக்கு வெளிச்சத்தில் அவன் முகம் கன்ருகத் தெரிந்தது. கன்னங் கரேலென்று அவன் இருந்தான். தலை பரட்டையாயிருந்தது. தாடி யும் மீசையும் அடர்த்தியாக இருந்தன. அவை எண் னெய் கண்டு எத்தனை நாட்கள் ஆகியிருக்குமோ ! இதற்குள் சுந்தரத்துக்குத் துணையாக வேலைக்காரர் களே வைத்துவிட்டு, டிரைவர் லாரியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். கேராக அமரபுராவை நோக்கி அறுபது மைல் வேகத்தில் ஒட்டினுர். தனது எஜமா னரை, அதாவது சுந்தரத்தின் அப்பாவை அழைத்து வரத்தான் டிரைவர் அவ்வளவு அவசரப் பட்டார். அரை மணி நேரம் சென்றது. மயங்கிக் கிடந்த அந்த மனிதன் மெதுவாகக் கண் விழித்தான். கண் விழிப்பதைக் கண்டதும், சுந்தரம் மிகவும் ஆவலோடு அவனைப் பார்த்தான். சுந்தரம் !" என்று மிகவும் மெல்லிய குரலில் அழைத்தான் அந்த மனிதன். இவருக்கு நம் பெயர்கூடத் தெரிந்திருக்கிறதே !’ என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே, இதோ இருக் கிறேன் ' என்ருன் சுந்தரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/210&oldid=808057" இலிருந்து மீள்விக்கப்பட்டது