பக்கம்:பர்மா ரமணி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராதது ! 203 சுந்தரத்தின் அ ரு கே வந்தார்கள். சுந்தரத்தைக் கண்டதும், ஆ, சுந்தரம் ' என்று அலறிவிட்டார் டிரைவர் மற்றவர்களும், தம்பி சுந்தரமா !” என்று ஆச்சரியத்தோடு கூறினர்கள். அவர்கள் எல்லோரும் சுந்தரத்தின் அப்பாவிடம் வேலை பார்ப்பவர்கள்தான். லாரியும் சு ங் த ர ம் வீட்டு லாரிதான். அவர்களைக் கண்டதும் சுந்தரத்துக்கு மிகவும் ஆறுதலாக இருந் தது. கீழே மயக்கமாகக் கிடந்த மனிதனை அவர்களுக் குக் காட்டி, கடந்ததைச் சுருக்கமாகக் கூறின்ை சுந் தரம் தன்னைக் காப்பாற்றிய அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று துடிதுடிப்போடு உடனே, அவர்களில் ஒருவன் பக்கத்தில் இருந்த குளத்துக்கு ஓடிப்போய்த் தண்ணிர் எடுத்து வந்தான். முகத்தில் தண்ணிரைத் தெளித்துப் பார்த்தார்கள். அவன் எழுந்திருக்கவில்லை. அதற்குள் சுந்தரம் தன் சட்டையை இரண்டாகக் கிழித்து அவன் தலையில் காயம்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டினன். அந்தக் கட்டையும் மீறி இரத்தம் மேலே வந்து கொண் டிருந்தது. அதற்கு மேலும் அந்த மனிதனை அங்கே வைத் திருக்க அவர்கள் விரும்பவில்லை. அவனத் தூக்கி லாரியில் படுக்க வைத்தார்கள். சுந்தரத்தையும் அழைத் துக்கொண்டு கே ரா. க மாந்தலேக்குச் சென்ருர்கள். அங்குள்ள பெரிய ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். டாக்டர் வந்தார். ஏதோ, சிகிச்சை செய்து பார்த் தார். அந்த மனிதனின் மூர்ச்சை தெளியவில்லை. சுந்தரத்துக்குப் பயமாக இருந்தது. ஏன் டாக்டர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/209&oldid=808053" இலிருந்து மீள்விக்கப்பட்டது