பக்கம்:பர்மா ரமணி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 பர்மா ரமணி அவன் தன் கையிலிருந்த ஒரு கூரான கல்லே அந்த மனிதனின் தலையைக் குறி பார்த்து எறிந்தான் ; எறிந்துவிட்டுத் திரும்பி ஓடிவிட்டான். அவன் எறிந்த கல் குறி தவருமல் அந்த மனிதனின் தலையைப் பல மாகத் தாக்கியது. மறு கிமிஷம், 'ஆ' என்று கத்திக் கொண்டே சுந்தரத்தைப் போட்டுவிட்டுத் தொப்' பென்று கீழே விழுந்தான் அவன். 25. எதிர்பாராதது! அந்த மனிதனுடன் கீழே விழுந்த சுந்தரம் சமா ளித்துக் கொண்டு எழுந்தான். எழுந்ததும், கவலை யோடு அந்த மனிதனின் அருகிலே சென்ருன். அவன் முகத்தை உற்றுப் பார்த்தான் தலையிலிருந்து குபு குபு என்று இரத்தம் வழிந்து கொண்டிருப்பது தெரிக் தது. அத்துடன் அவன் மயக்கமுற்றுக் கிடந்தான். அந்தக் காட்சியைக் கண்ட சுந்தரம், ஆ என்று அலறித் துடி துடித்துவிட்டான். அப்படி அவன் அலறுவதற்கும், லாரி பிரகாச மான வெளிச்சத்துடன் அருகில் வந்து சரக்! என்று நிற்பதற்கும் சரியாக இருந்தது. அதற்குள் முரடர் தஜலவனும், அவனுடன் வந்தவர்களும், ஐயோ ! போலீஸ் லாரிபோல் இருக்கிறதே ' என்று கூறிக் கொண்டே காட்டுக்குள் ஒடிப்போய் விட்டார்கள். ஆல்ை, அங்கு வந்தது போலீஸ் லாரியல்ல ; அது மரம் ஏற்றும் லாரி. லாரி நின்றதும் அதிலிருந்து டிரைவர் கிழே குதித்தார். அவருடன் நான்கு ஐந்து வேலைக்காரர்களும் கீழே குதித்தார்கள். எல்லோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/208&oldid=808051" இலிருந்து மீள்விக்கப்பட்டது