பக்கம்:பர்மா ரமணி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவிலே பரபரப்பு 20; இரைக்க இரைக்க வேகமாக ஓடினன். அப்போது சுந்தரம், இந்த மனிதர் கம்மைக் காப்பாற்றத்தான் குகைக்குள் வந்திருக்கிருர். சந்தர்ப்பம் தெரியாமல் 'யார் தூக்குவது?’ என்று கேட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டேனே 1 ஐயோ ! என்னுல் இவருக்கு எவ்வளவு சிரமங்கள்! பாவம், அந்த முரடர்கள் கல்லால் அடிக்கிருர்கள். ஆலுைம், இவர் கிற்கவில்லை என்னை எவ்வளவு பத்திரமாகத் துக்கிச் செல்கிருர் ரமணி யையும் இவர்தான் காப்பாற்றி யிருக்கவேண்டும். இவ்வளவு நல்ல மனிதர் யாரா யிருக்கும் : உற்றுப் பார்த்தால், தாடியும் மீசையும்தான் தெரிகின்றன. ஆள் அடையாளம் தெரியவில்லையே t' என்றெல்லாம் நினைத்தான். அதே சமயம், ஐயோ! முரடர்கள் கெருங்கி விட் டார்கள் போலிருக்கிறதே! என்ன ஆகுமோ ! எப்படி ஆகுமோ !” என்று கடுநடுங்கின்ை. ஒருவழியாகக் காட்டைக் கடந்து மாக்தலேக்குச் செல்லும் பெரிய சாலைக்கு வந்துவிட்டான் அந்த மனி தன். அப்போது அவனுக்கும் முரடர் தலைவனுக்கும் இடையில் நூறடி தூரம்கூட இல்லை. இதோ ஒரு நொடியில் அவர்களைப் பிடித்து விடுகிறேன் என்று கூறிக்கொண்டே தலைவன் வெகு வேகமாக நெருங்கி ன்ை. அதே சமயம் பாம் பாம் என்ற சப்தத்துடன் சிறிது தூரத்தில் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியைக் கண்டதும், சுந்தரமும் அந்த மனிதனும் இனித் தப்பிவிடலாம் என்ற கம்பிக்கையைப் பெற் ருர்கள். ஆனல் முரடர் தலைவனே, காசமாய்ப் போகிற லாரி இந்த நல்ல சமயத்திலா வரவேண்டும் !” என்று ஆத்திரப்பட்டான். அ ந் த ஆத்திரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/207&oldid=808049" இலிருந்து மீள்விக்கப்பட்டது