பக்கம்:பர்மா ரமணி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பர்மா ரமணி தெறிக்க ஓடிக்கொண்டிருந்த அவனைக் கண்டதும், அயோக்கியன் இவன்தான் ரமணியையும் தூக்கிச் சென்றிருப்பான். இவனேச் சும்மா விடக்கூடாது. உம், வாருங்கள், வாருங்கள் ' என்று கூறிக்கொண்டே தலைவன் அவனைத் துரத்தின்ை; மற்றவர்களும் துரத் தினர்கள். சுந்தரத்தைத் துரக்கிச் சென்றவன் ஓட்டத்திலே பெரிய புலியாயிருக்க வேண்டும். இல்லாத போனுல் சுந்தரத்தையும் தூக்கிக்கொண்டு அவ்வளவு வேகமாக ஓடமுடியுமா ? கரடு முரடான காட்டுப் பாதையிலும் அவன் காற்ருய்ப் பறந்து சென்ருன். முரடர்களும் விடவில்லை. துரத்திக் கொண்டே ஓடினர்கள். சுமார் ஒரு மணி நேரம் அபபடி ஒடியிருப்பார்கள். போகப் போக, சுந்தரத்தைத் துரக்கிச் சென்றவனுடைய வேகம் குறைய ஆரம்பித்தது ஆரம்பத்தில் அவனுக் கும், மற்றவர்களுக்கும் இடையே இரண்டு பர்லாங்கு தூரம் வித்தியாசமிருந்தது. ஆனல் அந்த வித்தியாசம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. இன்னும் சிறிது கேரத்தில் அவன் பிடிபட்டுவிடுவான்’ என்றே முரடர்கள் கினைத்தார்கள். கினைத்ததோடு விடவில்லை; வழியிலே கிடந்த கற்களை எடுத்து அவனைக் குறிபார்த்து எறியவும் ஆரம்பித்தார்கள். அவனுடைய முதுகிலும், பின் கால்களிலும், கற்களைப் பலமாக எறிந்து அவனுக்குக் காயம் உண்டாக்கினர்கள். கல்லடி விழும்போதெல்லாம் அவன் பல்லே இறுகக் கடித்துக் கொள்வான். சில சமயங்களில், உஸ், அப்பா என்று முணுமுணுப்பான். ஆலுைம், ஒட்டத்தை கிறுத்த வில்லை. சுந்தரத்தின் மீது அடிபட்டுவிடக் கூடாதே என்று அவனை மார்போடு அணைத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/206&oldid=808047" இலிருந்து மீள்விக்கப்பட்டது