பக்கம்:பர்மா ரமணி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவிலே பரபரப்பு 199 அன்று இரவு குகையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.சுந்தரமும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். இரவு மணி இரண்டு இருக்கும். அப் போது ஒர் உருவம் மெதுவாக சுக்தரத்தின் அருகே வந்தது. சுற்று முற்றும் பார்த்துவிட்டுக் கீழே குனிக் தது. மெதுவாக சுந்தரத்தைத் துரக்கித் தோள்மேல் போட்டுக்கொண்டு அடிமேல் அடிவைத்து கடந்தது. பத்தடி தூரம்கூடப் போகவில்லை. அதற்குள் சுந்தரம் விழித்துக்கொண்டு விட்டான். 'யாரது என்னத் தூக்குவது ?’ என்று உரத்த குரலில் கேட்டான். சத்தத்தைக் கேட்டதும், தலைவன் திடுக்கிட்டு எழுந்தான். சத்தம் வந்த திசையைப் பார்த்தான். அதற்குள் தடதட'வென்று யாரோ ஒடுவது தெரிந்தது. உடனே சுந்தரம் படுத்திருந்த இடத்தைத் தலைவன் பார்த்தான். சுந்தரத்தைக் காணுேம் ! 'ஆ சுந்தரத்தையும் பறிகொடுத்து விட்டோம்' என்று கூறிவிட்டு, டேய், டேய், எழுந்திருங்கள். ஆபத்து!’ என்று கத்தினுன். உடனே எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். எவனுே சுந்தரத்தைத் துரக்கிக்கொண்டு ஒடுகிருன், வாருங்கள். விடக் கூடாது அவனே ’ என்று கூறிக்கொண்டே தலைவன் முன்னுல் வேகமாக ஓடினன். மற்றவர்களும் பின் தொடர்ந்து ஓடினர்கள். குகைக் கதவு ஆ வென்று திறந்து கிடந்தது. அதைக் கடந்து எல்லோரும் வெளியில் வந்து பார்த் தார்கள். சுந்தரத்தைத் தூக்கிக்கொண்டு யாரோ ஓடுவது தெரிந்தது. மங்கலான நிலா வெளிச்சத்தில் அவன் யாரென்பது சரியாகத் தெரியவில்லை. தலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/205&oldid=808045" இலிருந்து மீள்விக்கப்பட்டது