பக்கம்:பர்மா ரமணி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராதது : 207 ரமணி, கீசுகமாக இருக்கவேணும். உன் சிநேகி தன் சுந்தரம் சுகமாக இருக்கவேணும்.” என்று கூறிக் கொண்டே ரமணியின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் தடவிக் கொடுத்தான் அந்த மனிதன். அப் போது அவன் குரல் கம்மியிருந்தது. அரை குறை யாகவே வார்த்தைகளும் வெளி வந்தன. உடனே ரமணி, ஐயா, எங்களுக்காக நீங்கள் இவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். ஆகு லும், நீங்கள் யார் என்பதை காங்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லையே ' என்று கலக்கத்தோடு கேட்டான். 'தம்பி, சொல்லத்தான் போகிறேன். இந்தக் கடைசி காலத்திலாவது சொல்லித்தானே ஆகவேண்டும் : அப் போதுதான் எனக்கு கிம்மதி ஏற்படும்” என்ருன் அந்த மனிதன். அப்போது சரக், சரக் என்று பூட்ஸ் சத்தத் துடன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், சில போலீஸ் காரர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கண்டதும் கட்டிலில் படுத்திருந்த மனிதன், ஐயா, கான் இனிப்பிழைக்க மாட்டேன். செத்துப்போவதற்கு முன்னுல் உங்களிடம் சில உண்மைகளைக் கூற வேண் டும். அதற்காகவே அழைத்து வரச் சொன்னேன்.” என்ருன். உடனே எல்லோரும் அவன் என்ன சொல்லப் போகிருன் என்பதை ஆவலுடன் கேட்கத் தயா ரானுர்கள்.

ஐயா, கான் யாரென்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமானல், முதலில் இந்தத் தாடியையும் மீசை யையும் எடுத்தாக வேண்டும் ' என்று கூறிவிட்டு,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/213&oldid=808077" இலிருந்து மீள்விக்கப்பட்டது