பக்கம்:பர்மா ரமணி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பர்மா ரமணி அவன் தன் தாடியையும் மீசையையும் பிடித்துப் பல மாக இழுத்தான். என்ன ஆச்சரியம் ! அவை கையோடு வந்துவிட்டன! ஆம், பொய்த் தாடி மீசைகளைத்தான் அவன் ஒட்ட வைத்திருந்தான் ! தாடியையும் மீசையையும் எடுத்தவுடனே ரமணி. யும் சுந்தரமும் அவனைப் பார்த்தார்கள். பார்த்ததுமே, சஆ! சுப்பையாவா குகையில் இருந்த சுப்பையாவா !” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். ஆம், சுப்பையாதான். அந்த முரடர் கோஷ்டி யைச் சேர்ந்த சுப்பையாவேதான்’ என்ருன் அவன். அந்த மனிதன் முரடர் கோஷ்டியைச் சேர்ந்தவன் என்று தெரிந்ததும், எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமா யிருந்தது. அதே சமயம் அவன் ரமணியைப் பார்த்து, * தம்பி ரமணி! கான் முரடர் கோஷ்டியைச் சேர்ந்தவன் என்பதைக் கேட்டதுமே எல்லோரும் ஆச்சரியப்படு கிறீர்கள். அனல், இதைக் காட்டிலும் மிக ஆச்சரிய மான ஓர் உண்மையை கான் இப்போது கூறப் போகி றேன்’ என்ருன் அவனுல் வேகமாகவோ, பலமாகவோ பேச முடியவில்லை. தட்டுத் தடுமாறிச் சொல்ல ஆரம் பித்தான். ரமணி, நீ பிறந்த வேலங்குறிச்சியிலேதான் நானும் பிறந்தேன்.”

  • அப்படியா நான் பிறந்த ஊரில்தான் நீங்களும் பிறந்தீர்களா ?”

ஆம். அதுமட்டுமல்ல; நீ பிறந்த குடும்பத்திலே தான் நானும் பிறந்தேன்’ என்ருன் சுப்பையா.

  • நிஜமாகவா !”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/214&oldid=808080" இலிருந்து மீள்விக்கப்பட்டது