பக்கம்:பர்மா ரமணி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராதது ! 233 1 சத்தியமாகச் சொல்லுகிறேன். உன் அப்பாவும் நானும் உடன் பிறந்தவர்கள். நான் உன் சித்தப்பா !” ' என் சித்தப்பாவா : ரமணியின் ஆச்சரியம் பல மடங்காயிற்று. மற்றவர்களும் அப்படியே ஆச்சரியப் பட்டார்கள். சுப்பையா மேலும் சொல்ல ஆரம்பித்தான் : 'ரமணி, நீ ஆறு வயசுப் பையனுக இருந்தபோது, கான் இந்த காட்டுக்குப் புறப்பட்டு வந்தேன். ரங்கனிலுள்ள ஒரு செட்டியார் கடையிலே கணக்கப்பிள்ளை யாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டாவது மகா யுத்தம் வந்தது. ஜப்பான்காரின் குண்டு மாரி பொழிந்து கொண்டிருந்தான். ரங்கூன் த8லககராதலால், எந்த கேரத்திலும் தங்கள் மேல் குண்டு விழுந்து விடும் என்று அங்கிருந்த மக்கள் பயக் தார்கள். ஆகையால் நகரை விட்டுக் கிராமப்புறங்களை கோக்கி ஓடினர்கள். நானும் காட்டுப் புறத்திலுள்ள ஒரு குக்கிராமத்துக்குச் சென்றேன். ” சுப்பையா இப்படிக் கூறும்போதே ரமணி குறுக் கிட்டு, ஆமாம், இப்போது நினைவுக்கு வருகிறது. அப்பா முன்பெல்லாம் அடிக்கடி உங்களைப் பற்றிச் சொல்லுவார். யுத்தத்திலே நீங்கள் குண்டுபட்டு இறந்து விட்டீர்களோ என்றுகூட அவர் சந்தேகப்பட் டார்” என்ருன். 'ரமணி, கான் குண்டுபட்டு இறந்திருந்தால் கூடத் தேவலே. இப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்யாமல் போயிருப்பேன். குக்கிராமத்தில் கான் தங்கியிருந்த போது சிலர் எனக்குச் சிநேகிதர்களானர்கள். அவர் களுடன் சேர்ந்து இந்தப் பாதகமான தொழிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/215&oldid=808082" இலிருந்து மீள்விக்கப்பட்டது