பக்கம்:பர்மா ரமணி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பர்மா ரமணி பர்மாவில் ரமணியைக் கண்டதும் மதுரகாயகம் அப்படியே அவனைக் கட்டித் தழுவிக்கொண்டார். அப் போது மோகனரங்கமும் மற்றவர்களும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. பிரிந்தவர் கூடும் போது ஆனந்தத்துக்குக் கேட்க வேண்டுமா ? மாந்தலே நகரில் முதல் முதலாகஅவர்கள் கடத்திய நாடகம் கோமாளிக் குப்பன்' என்பதுதான் 1 ஆம், ரமணி எழுதிய கதையைத்தான் அவர்கள் காடகமாக்கி யிருந்தார்கள். இடையிலே இருந்த இரண்டு மாத காலத்தில் அந்த நாடகத்தை அவர்கள் தயாரித்து விட்டார்கள். முதல் நாள் கடந்த நாடகத்துக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆல்ை, பதின்ைகு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அனுமதிக்கப்பட்டார்கள். மாந்தலே நகரிலுள்ள எல்லாக் குழந்தைகளும் பர்மியக் குழந்தைகள் உள்பட-கும்பல் கும்பலாக வந்து கோமாளிக் குப்பன் நாடகத்தைக் குது.ாகலத்துடன் பார்த்தார்கள். அடிக்கடி கைதட்டி ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்கள். ஆஹா அற்புதம்! அபாரம்' என்று வாய்விட்டுப் புகழ்ந்தார்கள். காடகத்தை எழுதிய ரமணிக்கு மாலை போட்டு மரியாதை செய்யும்போது, பர்மா ரமணி வாழ்க! பர்மா ரமணி வாழ்க!" என்று அந்தக் கொட்டகையே அதிரும் படி குழந்தைகள் எல்லோரும் கோஷமிட்டார்கள். அவர் களுடன் சேர்ந்து நாமும், பர்மா ரமணி வாழ்க! நீடுழி வாழ்க!” என்று வாழ்த்துவோமாக !

  • 燃疫

?{Ꮉy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/226&oldid=808108" இலிருந்து மீள்விக்கப்பட்டது